For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா? ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி!

Recommended Video

India vs West Indies T20 | 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது வெ.இண்டீஸ்

திருவனந்தபுரம் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதை அடுத்து டி20 தொடர் 1 - 1 என்ற சமநிலையை எட்டியது.

இரண்டாவது டி20யில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 170 ரன்கள் குவித்தது. அந்த ஸ்கோரை மிக எளிதாக ஊதித் தள்ளியது அதிரடி பேட்ஸ்மேன்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி.

டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் டாஸில் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் ஆடியது. இந்தப் போட்டி நடந்த ஆடுகளம் சேஸிங் செய்ய சாதகமாக இருந்த நிலையில், அப்போதே இந்திய அணிக்கு பின்னடைவு துவங்கியது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்திய துவக்க வீரர்கள் ராகுல் 11, ரோஹித் சர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவருமே சொதப்பலாக ஆடியதால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் அதிகரித்தது.

சிவம் துபே அதிரடி

சிவம் துபே அதிரடி

மூன்றாம் வரிசையில் கேப்டன் கோலிக்கு பதில் இளம் வீரர் சிவம் துபே இறங்கினார். முதலில் கடினமான ஆடுகளத்தால் தடுமாறினாலும், பின்னர் அவர் ரன் குவிப்பில் ஈடுபட்டார். 4 சிக்ஸர்கள் அடித்த அவர் 30 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.

இந்திய வீரர்கள் ஆட்டம்

இந்திய வீரர்கள் ஆட்டம்

அடுத்து கோலி 19, ஸ்ரேயாஸ் ஐயர் 10, ஜடேஜா 9, வாஷிங்க்டன் சுந்தர் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் 22 பந்துகளில் 33 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 170 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் கடினமாக இருப்பதால், இந்த ஸ்கோரே போதும் என்ற எண்ணத்தில் இருந்ததனர் இந்திய ரசிகர்கள்.

வெ.இண்டீஸ் அபாரம்

வெ.இண்டீஸ் அபாரம்

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக பேட்டிங் செய்தது. துவக்க வீரர் சிம்மன்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் குவித்தார். லீவிஸ் 40, ஹெட்மையர் 23, நிக்கோலஸ் பூரன் 38* ரன்கள் குவித்தனர்.

அபார வெற்றி

அபார வெற்றி

இந்திய அணி சிரமப்பட்டு அடித்த ஸ்கோரை 18.3 ஓவர்களில் கடந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அந்த அணியின் வீரர்கள் சேர்ந்து 12 சிக்ஸர்கள் அடித்ததே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தொடர் சமன்

தொடர் சமன்

இந்தப் போட்டியின் வெற்றிக்குப் பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1 - 1 என சம நிலையை எட்டி உள்ளது. மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் அந்தப் போட்டிக்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

Story first published: Sunday, December 8, 2019, 22:56 [IST]
Other articles published on Dec 8, 2019
English summary
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன டி20 தொடரின் இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதை அடுத்து டி20 தொடர் 1 - 1 என்ற சமநிலையை எட்டியது. மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் அந்தப் போட்டிக்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+