Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்த ஒரு ஓவர் தான் ஆட்டத்தையே மாற்றும்.. இர்பான் பதான் கணிப்பு

மும்பை: டி20 உலககோப்பையில் சூப்பர் 8 சுற்றில் இன்று இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு மேற்கிந்தியத் தீவுகளின் ஷிம்ரான் ஹெட்மயருக்கு எதிராக மிக முக்கியமானது என இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான ஷிம்ரான் ஹெட்மயர், மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஆறு இன்னிங்ஸ்களில் இரண்டு அரை சதங்கள் உட்பட 221 ரன்கள் குவித்து, சராசரி 44.20 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 182.64 உடன் அபாரமான ஃபார்மில் உள்ளார்.

இது குறித்து பேசிய இர்ஃபான் பதான், “ஜஸ்பிரித் பும்ராவின் நான்கு ஓவர்களை அணி எப்படி திட்டமிடும்? ஷிம்ரான் ஹெட்மயருக்கு எதிரான அவரது ஒரு ஓவர் மிக முக்கியமானதாக இருக்கும். பும்ராவால் ஹெட்மயரை வீழ்த்த முடியவில்லை என்றால், வருண் சக்கரவர்த்தியை மற்றொரு முனையில் பந்து வீசக் கொண்டு வருவீர்களா?

ஹெட்மயர் ஏற்கனவே 17 சிக்ஸர்கள் அடித்து அபாரமாக விளையாடுகிறார். மூன்றாவது இடத்தில் இறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றி, தொடர்ந்து அடித்து ஆடுகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, லெந்த் பந்தை புல் ஷாட் அடிக்க முயன்றபோது அவர் அவுட்டானார். இப்போது அவருக்கு எதிராக உங்கள் திட்டம் என்ன? ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே பந்து வீசுவீர்களா? அவர் லெக் சைடில் விரும்புவதால், ஸ்டம்புகளை விட்டு விலகி பந்தை ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே வீசுவீர்களா?

இது ஒரு உத்தி, கவனம் தேவை. லெக் சைடில் அடித்தால், ஃபீல்டிங் எப்படி அமைக்கப்படும்? பந்துவீச்சு வேகத்தில் என்ன மாற்றம்? ஷிம்ரான் ஹெட்மயருக்கு எதிராக பும்ராவின் ஸ்லோ பந்தும் மிக முக்கியம்,” என்று பதான் தனது ஆலோசனைகளைத் தெரிவித்தார்.இந்தத் தொடரில் இதுவரை இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா ஐந்து போட்டிகளில் விளையாடி, ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 12.85, ஸ்ட்ரைக் ரேட் 13.71, மற்றும் எக்கானமி 5.62 ஆகும். 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சு.

தொடர்ந்து பேசிய இர்பான் “இந்திய அணியில் உள்ள இடது கை பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோட்டிக்கு எதிராக ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட மனதளவில் தயாராக வேண்டும். இதுவே என் ஆலோசனை. மோட்டி எப்படி பந்து வீசுவார்? வலது கை பேட்ஸ்மேன்கள் வரும்போது, அவர் ஃபிங்கர் ஸ்பின்னை பயன்படுத்தி பந்தை அவர்களிடமிருந்து விலக்கிச் செல்வார். ஆனால் ஒரு இடது கை பேட்ஸ்மேன் வந்தவுடன், மோட்டி ரிஸ்ட் ஸ்பின்னுக்கு மாறுவார்.”

“எனினும், ஒரு முக்கிய வேறுபாடு இதுதான். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு ஃபிங்கர் ஸ்பின் வீசும்போது மோட்டிக்கு அதிக கட்டுப்பாடு இருக்கும். ஆனால் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ரிஸ்ட் ஸ்பின் பயன்படுத்தும்போது அதே கட்டுப்பாடு இருப்பதில்லை,” என்று பதான் விளக்கினார்.நடப்பு உலகக் கோப்பையில் மோட்டி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு, ஆறு போட்டிகளில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 15.50, ஸ்ட்ரைக் ரேட் 12.00, மற்றும் எக்கானமி 7.75 ஆகும். 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சு.

Story first published: Sunday, March 1, 2026, 17:24 [IST]
Other articles published on Mar 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+