Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1,747 பந்துகள்.. கபில் தேவ் சாதனை முறியடிப்பு! சொந்த மண்ணில் விரைவாக 50 விக்கெட்டை வீழ்த்திய பும்ரா

அகமதாபாத்: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா சொந்த மண்ணில் அதி வேகமகா 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். சொந்த மண்ணில் 24 இன்னிங்ஸ்களில் பும்ரா 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய் அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Jasprit Bumrah

வெறும் 44.1 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கதையை இந்திய பவுலர்கள் முடித்தனர். வழக்கம் போல் ரெட் பாலில் பும்ரா மேஜிக்கை நிகழ்த்திக் காட்டினார். அதேபோல் சொந்த மண்ணில் பும்ரா விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். சொந்த மண்ணில் 50 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு பும்ராவுக்கு 1,747 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டிருக்கிறது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் சொந்த மண்ணில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில், குறைவாக பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியது பும்ரா தான். அதேபோல் இந்த சாதனையை படைப்பதற்கு பும்ராவுக்கு வெறும் 24 இன்னிங்ஸ்கள் மட்டுமே தேவையாக இருந்துள்ளது. இதற்கு முன்பாக ஜவகல் ஸ்ரீநாத் 23 இன்னிங்ஸில் சொந்த மண்ணில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் கபில் தேவ் 25 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் இருக்கிறார். இதன்பின் இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் 27 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளனர். பும்ரா ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருவது ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, October 2, 2025, 17:53 [IST]
Other articles published on Oct 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+