Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: எந்த இந்திய ஃபாஸ்ட் பவுலரும் செய்யாத மெகா சாதனையை செய்த பும்ரா.. 50வது டெஸ்ட் மேட்ச்

டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் 50-வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் இந்தியாவிற்காக தலா 50 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சரித்திர சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்திய வீரர்களில் பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே மூன்று வடிவங்களிலும் 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி உள்ளனர். முதல் முறையாக வேகப் பந்துவீச்சாளர்களில் பும்ரா இந்த சாதனையை செய்துள்ளார். இதுவரை ஆறு வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர்.

IND vs WI Jasprit Bumrah Creates History First Indian Pacer to Play 50 Matches in All Three Formats

மூன்று வடிவங்களிலும் பும்ராவின் ஆதிக்கம்

இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் பும்ரா விளையாடி உள்ள போட்டிகளின் விவரம் -

  • டெஸ்ட் கிரிக்கெட்: 50 போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா, இதுவரை 222 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார் (15 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்).
  • ஒருநாள் கிரிக்கெட்: 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா.
  • டி20 கிரிக்கெட்: 75 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி உள்ள பும்ரா , அதில் 96 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த பும்ரா

இந்தச் சாதனையின் மூலம், மூன்று வடிவங்களிலும் 50-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய இந்திய ஜாம்பவான்களின் பட்டியலில் பும்ரா இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் இதற்கு முன்பு எம்.எஸ். தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மட்டுமே இடம்பிடித்திருந்தனர். தற்போது ஏழாவது வீரராகவும், முதல் வேகப்பந்து வீச்சாளராகவும் பும்ரா இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நாடுகளையும் வென்ற நாயகன்

கடந்த வாரம் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியாவில் தனது 50-வது டெஸ்ட் விக்கெட்டை அவர் நிறைவு செய்தார். இதன்மூலம், மூன்று வெவ்வேறு நாடுகளில் (இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து) தலா 50-க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

Story first published: Friday, October 10, 2025, 15:03 [IST]
Other articles published on Oct 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+