Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: வரலாறை மாற்றிய செஞ்சுரி.. 22 ஆண்டு ரெக்கார்டை உடைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான் கேம்ப்பெல்

டெல்லி: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபாலோ-ஆன் பெற்றுத் தவித்துக் கொண்டிருந்த நிலையில் ஜான் கேம்ப்பெல் சதம் அடித்து போட்டியையே மாற்றி இருக்கிறார். அவரது ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்தியப் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், நிதானமாகவும், அதே சமயம் நேர்த்தியாகவும் ஆடிய தொடக்க வீரர் ஜான் கேம்ப்பெல், தனது 50-வது டெஸ்ட் இன்னிங்ஸில், சிக்ஸருடன் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்து சரித்திரம் படைத்துள்ளார்.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்த சாதனை தருணம் அரங்கேறியது. ஃபாலோ-ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜான் கேம்ப்பெல் மற்றும் ஷாய் ஹோப்பின் அபாரமான ஆட்டத்தால் இந்தியாவிற்குப் பதிலடி கொடுத்து வந்தது.

IND vs WI John Campbell Hits First Century with a Six breaks records after 50 Innings of Struggle

சிக்ஸருடன் சரித்திரம் படைத்த தருணம்!

ஆட்டத்தின் 58-வது ஓவரை இந்தியாவின் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா வீசினார். அப்போது 95 ரன்களுடன் களத்தில் இருந்த ஜான் கேம்ப்பெல், சிறிதும் பதற்றமின்றி, ஜடேஜா வீசிய பந்தை தனது பலம் வாய்ந்த 'ஸ்லாக்-ஸ்வீப்' ஷாட் மூலம் லாங்-ஆன் திசைக்கு மேலே தூக்கி அடித்தார். பந்து, ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் சிக்ஸருக்குப் பறக்க, ஜான் கேம்ப்பெல் தனது முதல் டெஸ்ட் சதத்தை ஸ்டைலாக எட்டினார்.

தனது ஹெல்மெட்டைக் கழற்றி, வானத்தை நோக்கிப் பார்த்து, ஓய்வறையில் இருந்த சக வீரர்களின் பாராட்டுகளை அவர் ஏற்றுக்கொண்ட காட்சி, அவரது நீண்ட காலப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாக அமைந்தது.

பல ஆண்டு கால சாதனைகளைத் தகர்த்த சதம்

ஜான் கேம்ப்பெல்லின் இந்த சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளையும் செய்து இருக்கிறார். 2002-ஆம் ஆண்டு ஈடன் கார்டன் மைதானத்தில் வேவல் ஹைண்ட்ஸ் சதம் அடித்த பிறகு, இந்திய மண்ணில் சதம் அடிக்கும் முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் என்ற பெருமையை கேம்ப்பெல் பெற்றுள்ளார். 2006-ஆம் ஆண்டு டேரன் கங்கா இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து இருந்தார். அதன் பிறகு, இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் சதம் அடிக்கும் முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் இவரே.

தனது முதல் டெஸ்ட் சதத்தை சிக்ஸருடன் எட்டியதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ஒரு சாதனைப் பட்டியலிலும் ஜான் கேம்ப்பெல் இணைந்துள்ளார். ஒரு தொடக்க வீரராக தனது முதல் சதத்தை எட்ட, ஜான் கேம்ப்பெல் 48 இன்னிங்ஸ்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் முதல் சதத்துக்கு அதிக இன்னிங்ஸ் எடுத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார்.

மறுபுறம் ஷாய் ஹோப்-உம் அபாரமாக ஆடி வரும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களுடன் ஆடி வருகிறது. அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, October 13, 2025, 10:39 [IST]
Other articles published on Oct 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+