எங்க போனாலும் விட மாட்டேன்.. கோலியை துரத்தும் வெ.இண்டீஸ் வீரர்.. ஐபிஎல் அணியின் மாஸ்டர் பிளான்!

ஐபிஎல் போட்டிகளிலும் விராட் கோலியை துரத்தும் வெ.இண்டீஸ் வீரர்

கொல்கத்தா : வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ், இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடனான மோதலை ஐபிஎல் தொடருக்கும் எடுத்துச் செல்ல இருக்கிறார்.

2020 ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஐபிஎல் அணிகள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் 24 வீரர்கள் புதிதாக ஏலப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரு ஐபிஎல் அணி கேஸ்ரிக் வில்லியம்ஸ்-ஐ ஏலப் பட்டியலில் சேர்க்குமாறு கூறி இருக்கிறது. அதனால், அவரும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க இருக்கிறார்.

வில்லியம்ஸ் - கோலி மோதல்

வில்லியம்ஸ் - கோலி மோதல்

கடந்த சில நாட்கள் முன்பு நடைபெற்ற டி20 தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் - இந்திய கேப்டன் விராட் கோலி இடையே மூன்று போட்டிகளிலும் கேலி, கிண்டல் தொடர்ந்து நடந்து வந்தது.

2017 சம்பவம்

2017 சம்பவம்

2017ஆம் ஆண்டு கேஸ்ரிக் வில்லியம்ஸ் ஒரு சர்வதேச போட்டியில் கோலி விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின் தன் வழக்கமான சீண்டல் முறையில், நோட்புக் எடுத்து, கோலி விக்கெட்டை வீழ்த்தி விட்டேன் என குறிப்பது போல சைகையில் செய்து காட்டினார்.

கிண்டல் செய்த கோலி

கிண்டல் செய்த கோலி

அதை மறக்காத கோலி, வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் டி20 போட்டியில் வில்லியம்ஸ் பந்துவீச்சில் சரமாரியாக அடித்து விளாசி சிக்ஸ் அடித்த போது, அதே போல நோட்புக் எடுத்து சிக்ஸ் அடித்து விட்டேன் என டிக் செய்து கிண்டல் செய்தார்.

உஷ் காட்டிய வில்லியம்ஸ்

உஷ் காட்டிய வில்லியம்ஸ்

அத்துடன் அந்த கேலி, கிண்டல் ஓயவில்லை. இரண்டாவது டி20 போட்டியில் கோலி விக்கெட்டை வீழ்த்தினார் வில்லியம்ஸ். அப்போது கோலி போலவே விக்கெட் எடுத்தவுடன் உதட்டில் ஒற்றை விரலை வைத்து "உஷ்" என சைகை காட்டினார்.

நக்கலடித்த கோலி

நக்கலடித்த கோலி

இதற்கு பழி தீர்க்கும் வகையில் கோலி மூன்றாவது போட்டியில் வில்லியம்ஸ் பந்துவீச்சில் பெரிய சிக்ஸ் அடித்து விட்டு, நக்கலாக பந்தையும், வில்லியம்ஸ்-ஐயும் மாற்றி மாற்றி பார்த்து கிண்டல் செய்தார்.

ஐபிஎல் அணியின் திட்டம்

ஐபிஎல் அணியின் திட்டம்

இந்த கேலி, கிண்டல்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், இது ஐபிஎல் அணிகளையும் கவர்ந்துள்ளது. ஒரு ஐபிஎல் அணி கேஸ்ரிக் வில்லியம்ஸ்-ஐ தங்கள் அணிக்குள் இழுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஏலத்தில் வில்லியம்ஸ்

ஏலத்தில் வில்லியம்ஸ்

அதனால், ஐபிஎல் ஏலத்தில் இடம் பெறும் வீரர்களில் புதிதாக சேர்க்கப்பட்ட வீரர்கள் பெயரில் வில்லியம்ஸ் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த புதிய பட்டியலில் இடம் பெறும் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் அணிகளின் விருப்பப்படி சேர்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடக்கி வாசிக்கும் கோலி

அடக்கி வாசிக்கும் கோலி

வில்லியம்ஸ், கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதிலும் கில்லாடியாக இருக்கிறார். மேலும், கோலி முதல் போட்டியில் வில்லியம்ஸ் பந்துவீச்சில் அதிரடி காட்டினாலும், இரண்டாவது, மூன்றாவது போட்டியில் சற்றே அடக்கியே வாசித்தார்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

வில்லியம்ஸ்-ஐ வாங்க முயற்சி செய்யும் ஐபிஎல் அணி, கோலி - வில்லியம்ஸ் மோதலை வைத்து களத்திற்கு வெளியே ஆதாயம் தேட முயற்சி செய்கிறதா? அல்லது களத்தில் வில்லியம்ஸ், கோலியை வீழ்த்துவார் என எதிர்பார்க்கிறதா?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI : Kohli’s rival Kesrick Williams included in IPL draft list
Story first published: Friday, December 13, 2019, 13:34 [IST]
Other articles published on Dec 13, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X