Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் சேரும் அந்த ஜோடி.. 3 ஸ்பின்னர்கள்.. கோலியின் மாஸ்டர் பிளான் இதுதான்! #INDvsWI

விசாகப்பட்டினம் : இந்தியா - வெ.இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆடுகளத்துக்கு ஏற்றாற்போல அணியை தேர்வு செய்வார்.

அதன்படி, மூன்றாவது ஒருநாள் போட்டியில் மூன்று ஸ்பின்னர்களை கோலி களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதல் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

முதல் போட்டியில் தோல்வி

முதல் போட்டியில் தோல்வி

முதல் போட்டியில் இந்தியா 287 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக சேஸிங் செய்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரண்டாம் போட்டி வெற்றி

இரண்டாம் போட்டி வெற்றி

அடுத்து நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆடியது. முதலில் பேட்டிங் செய்து 387 ரன்கள் குவித்து மிரட்டியது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 280 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இதையடுத்து ஒருநாள் தொடர் 1 - 1 என்ற சமநிலையை எட்டியது. மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

குல்தீப் யாதவ் - சாஹல்

குல்தீப் யாதவ் - சாஹல்

கேப்டன் கோலி மூன்றாவது போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் குல்தீப் யாதவ் - சாஹல் ஜோடியை களமிறக்குவார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து பந்து வீசினால் இந்தியாவுக்கு எளிதாக விக்கெட்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கட்டாக் ஆடுகளம்

கட்டாக் ஆடுகளம்

மூன்றாவது போட்டி நடைபெற இருக்கும் கட்டாக் ஆடுகளம் ஸ்பின்னுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் நிச்சயம் கேப்டன் கோலி அதற்கேற்ப அதிக ஸ்பின்னர்களை ஆட திட்டமிடுவார்.

மூன்று ஸ்பின்னர்கள்

மூன்று ஸ்பின்னர்கள்

முதல் இரண்டு போட்டிகளில் ஜடேஜா, குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் ஷர்துல் தாக்குரை நீக்கி விட்டு சாஹல் அணியில் இடம் பெறுவார்.

உத்தேச இந்திய அணி

உத்தேச இந்திய அணி

உத்தேச இந்திய அணி - ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, நவ்தீப் சைனி, சாஹல்.

Story first published: Saturday, December 21, 2019, 17:01 [IST]
Other articles published on Dec 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+