Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் வீரர்களை சேர்த்து, உடனே நீக்கினால் அணியை கட்டமைக்க முடியாது.. கையிப் சாடல்

மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் மற்றும் வீரர்களின் தேர்வு முறை குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்திய அணி நிர்வாகம் ஜஸ்ப்ரீத் பும்ராவை மட்டுமே அளவுக்கு அதிகமாகச் சார்ந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அணியில் இளம் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்படுவதும், நீக்கப்படுவதுமான போக்கு மாற வேண்டும் என்று கைஃப் வலியுறுத்தினார். இது குறித்து பேசிய அவர், "பும்ராவை மட்டுமே அதிகம் சார்ந்து இருக்கும் நிலை உள்ளது. பல பந்துவீச்சாளர்கள் அணிக்கு வருகிறார்கள், உடனே வெளியேற்றப்படுகிறார்கள். வீரர்களைத் தொடர்ந்து சோதிப்பதும் நீக்குவதுமாக இருந்தால் ஒரு சிறந்த அணியை உருவாக்க முடியாது. ஒருவருக்கு வாய்ப்பு அளித்தால், அவரைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்" என்று கூறினார்.

Ind vs WI

"ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சோபிக்காவிட்டால் நீக்கப்பட்டுவிடுவோம் என்ற பதற்றத்துடன் விளையாடும் போது பந்துவீச்சு பாதிக்கப்படும். குறைந்தபட்சம் ஆறு போட்டிகளில் ஆடவைப்போம் என்ற நம்பிக்கையை வீரர்களுக்கு வழங்க வேண்டும். இல்லையெனில், அணிக்கு வரும் வீரர்கள் பயத்துடனே விளையாடுவார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

IND vs WI: 5வது டி20யில் புவனேஸ்வர் குமார் சேர்ப்பு.. ஆர்ஸ்தீப் காயம் காரணமாக பிசிசிஐ நடவடிக்கை

IND vs WI: 5வது டி20யில் புவனேஸ்வர் குமார் சேர்ப்பு.. ஆர்ஸ்தீப் காயம் காரணமாக பிசிசிஐ நடவடிக்கை

இளம் வீரர்களுக்கு மட்டுமல்லாமல், குல்தீப் யாதவ் போன்ற முன்னணி மூத்த வீரர்களுக்கும் போதிய ஆதரவு அளிக்கப்படுவதில்லை என்று கைஃப் கவலை தெரிவித்தார். முதல் போட்டியில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய குல்தீப் யாதவ், இரண்டாவது போட்டியில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்த ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்த போட்டிகளில் அமர்த்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

IND vs NZ: 25 வயது வீரர் சேர்க்கப்பட்டதால், இந்திய அணி பலம் மேலும் அதிகரிக்கும்.. EX வீரர் பாராட்டு

Also Read

IND vs NZ: 25 வயது வீரர் சேர்க்கப்பட்டதால், இந்திய அணி பலம் மேலும் அதிகரிக்கும்.. EX வீரர் பாராட்டு

"மூத்த வீரர்களிடமும் நிலைத்தன்மை இல்லை, இளம் வீரர்களுக்கும் ஆதரவு தருவதில்லை. தொடர்ந்து மாற்றங்களைச் செய்துகொண்டே இருந்தால் அணியைக் கட்டமைக்க முடியாது. உலகக்கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கிறது என்பது நல்ல விஷயம். இந்த தவறுகளை இந்திய அணி நிர்வாகம் உரிய நேரத்தில் சரிசெய்ய வேண்டும் என்பதே தற்போதைய சவாலாகும்" என்று முகமது கைஃப் தெரிவித்தார்.

Story first published: Friday, October 16, 2026, 15:36 [IST]
Other articles published on Oct 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+