For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மின்னல் வீரனை இறக்குறோம்.. ஜெயிக்கிறோம்.. அதிரடி முடிவு எடுத்த கேப்டன் கோலி! INDvsWI

Recommended Video

மின்னல் வீரரை களமிறக்கிய கோலி... புது திட்டம்

கட்டாக் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்தார் கேப்டன் கோலி.

மூன்றாவது போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது நவ்தீப் சைனி இந்திய அணியில் அறிமுகம் ஆவதை அறிவித்தார் கோலி.

கோலி முடிவு

கோலி முடிவு

சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் கூடுதல் சுழற் பந்துவீச்சாளரை கோலி அணியில் சேர்ப்பார் என எதிர்பார்த்த நிலையில், அதிக வேகத்தில் பந்து வீசும் நவ்தீப் சைனியை மட்டுமே அணியில் சேர்த்தார்.

சைனிக்கு வாய்ப்பு

சைனிக்கு வாய்ப்பு

காயத்தால் விலகிய தீபக் சாஹருக்கு பதில் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டார். உலகக்கோப்பைக்கு பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகம் ஆன சைனி, தற்போது அதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

மின்னல் வேக பவுலிங்

மின்னல் வேக பவுலிங்

நவ்தீப் சைனி சில சமயம் 150 கிலோமீட்டருக்கு மேலும், சராசரியாக 140 கிலோமீட்டருக்கும் மேல் மின்னல் வேகத்தில் பந்து வீசக் கூடியவர். அந்த ஒரே காரணத்தால் தான் டி20 போட்டிகளில் அவர் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

5 விக்கெட்கள்

5 விக்கெட்கள்

5 டி20 போட்டிகளில் 6 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள சைனி இடையே காயம் காரணமாக அணியில் வாய்ப்பை இழந்தார். உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த அவர், சமீபத்தில் ரஞ்சி தொடரில் ஒரு போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தி தன்னை நிரூபித்தார்.

தீபக் சாஹர் காயம்

தீபக் சாஹர் காயம்

அதே சமயம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வந்த வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயம் அடைந்தார். அவர் மூன்றாவது போட்டியில் ஆட முடியாத நிலையில் நீக்கப்பட்டார்.

வாய்ப்பு சந்தேகம்

வாய்ப்பு சந்தேகம்

அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டார். எனினும், அவருக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமாக இருந்தது. அணியில் ஷமி, ஷர்துல் தாக்குர் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்று இருந்தனர்.

சைனி இடம் பெறுவாரா?

சைனி இடம் பெறுவாரா?

மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறும் கட்டாக் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என கூறப்பட்ட நிலையில், நவ்தீப் சைனி மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி இருந்தது.

கோலி உறுதி

கோலி உறுதி

எனினும், கேப்டன் விராட் கோலி உறுதியாக சைனியை மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக அணியில் சேர்த்தார். ஜடேஜா, குல்தீப் யாதவ் அணியில் சுழற் பந்துவீச்சாளர்களாக தொடர்ந்தனர். அணியில் சாஹருக்கு பதில் சைனி இடம் பெற்றதை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

மூன்றாவது போட்டியில் ஆடும் இந்திய அணி விவரம் - ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ், ஜடேஜா, ஷமி, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி.

Story first published: Sunday, December 22, 2019, 14:53 [IST]
Other articles published on Dec 22, 2019
English summary
IND vs WI : Kohli made Navdeep Saini debut in third ODI against West Indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X