Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்- இந்தியாவின் சிறந்த பிளேயிங் லெவன் இது தான்..!!

அகமதாபாத்: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இருவேறு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி வரும் 6ஆம் தேதி அகமதாபாத் நகரில் தொடங்கும் நிலையில், இந்தியாவின் சிறந்த பிளேயிங் லெவன் என்ன என்பதை தற்போது காணலாம்.

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் அணிக்கு திரும்பியுள்ளதால், கே.எல்.ராகுல் நடுவரிசையில் தான் களமிறங்க வேண்டும். ஏனென்றால் தென்னாப்பிரிக்க தொடரில் நடுவரிசையில் அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தினறியது. 3வது வீரராக கிங் கோலி தான் களமிறங்குவார்.இந்திய அணியை பொறுத்தவரை முதல் 3 இடம் பிரச்சினை இல்லை.ஆனால் ஒரு போட்டியிலாவது ஷிகர் தவானுக்கு ஓய்வு வழங்கி, ருத்துராஜை சோதித்து பார்க்க வேண்டும்.

நடுவரிசை வீரர்கள்

நடுவரிசை வீரர்கள்

மொத்த சிக்கலே இந்த நடுவரிசையில் தான் உள்ளது. தோனி, ரெய்னா ஓய்வுக்கு பிறகு, எந்த வீரரை அணியில் சேர்ப்பது என்று தேர்வுக்குழுவும், அணி நிர்வாகமும் குழப்பத்தில் உள்ளன. இதனால் மியூசிக்கல் சேர் விளையாட்டு போல், வீரர்களை மாற்றி வருகின்றனர். ஆனால் கே.எல்.ராகுலை 4வது வீரராகவும், சூர்யகுமார் யாதவை 5வது வீரராகவும், ரிஷப் பண்டை 6வது வீரராகவும் களமிறக்க வேண்டும்.

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

தற்போது இந்திய அணியில் அடுத்த குழப்பம் யாரை ஆல் ரவுண்டர்களாக போடுவது என்பது தான். தற்போது ஜடேஜாவும், ஹர்திக் பாண்டியாவும் இல்லை. இதனால் புதிய வீரர்களை தேர்ந்து எடுப்பது கட்டாயம். அடுத்த ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால், சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் தான் அணிக்கு வேண்டும். அந்த வகையில் 7வது வீரராக தீபக் ஹூடா அல்லது வாஷிங்டன் சுந்தரை தான் இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும்.

வேகப் பந்துவீச்சாளர்கள்

வேகப் பந்துவீச்சாளர்கள்

அடுத்ததாக 3வது வேகப்பந்துவீச்சாளர். இதில் ஒருவருக்கு பேட்டிங் தெரிந்த ஆல் ரவண்டராக இருப்பது நலம். புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் தீபக் சாஹர் வல்லவர்.இதனால் அவருக்கு தான் 8வது வீரராக வாய்ப்பு தர வேண்டும். பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் 9வது வீரராக ஷர்துலை சேர்க்கலாம். ஆனால் புதிய பந்துவீச்சாளரான ஆவேஷ் கானை சேர்த்து, பரிசோதிப்பது தான் சிறந்த முடிவாக இருக்கும்.

சுழற்பந்துவீச்சாளர்

சுழற்பந்துவீச்சாளர்

10வது வீரராக, 3வது பந்துவீச்சாளராக முகமது சிராஜ். பும்ரா இல்லாததால் அந்த பொறுப்பை இவர் தான் எடுத்து கொண்டு, ஜாகிர் கான் போல் செயல்பட வேண்டும். 11வது வீரராக ஒரு சுழற்பந்துவீச்சாளர் வேண்டும். இதில் சாஹல், குல்தீப், பிஸ்னாய் என்று மூன்று வீரர்கள் உள்ளனர். இதில் சாஹலுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், பிஸ்னாயின் திறமையை ஒரு போட்டியிலாவது சோதித்து பார்க்க வேண்டும். குல்தீப் பழைய திறனுடன் பந்துவீசினால் இந்தியாவுக்கு அது பெரும் பயனளிக்கும்.

Recommended Video

West Indies அணியில் பிளவு? Pollard மற்றும் Odean Smith மோதல் | Oneindia Tamil
சிறந்த பிளேயிங் லெவன்

சிறந்த பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, ஷிகர் தவான் 3,விராட் கோலி, 4, கே.எல்.ராகுல். 5, சூர்யகுமார் யாதவ் 6, ரிஷப் பண்ட். 7, தீபக் ஹூடா/வாசிங்டன் சுந்தர். 8, தீபக் சாஹர், 9, ஷர்துல் தாக்கூர்/ அவேஷ் கான், 10, முகமது சிராஜ், 11, சாஹல்/பிஸ்னாய்.

Story first published: Saturday, January 29, 2022, 18:57 [IST]
Other articles published on Jan 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+