For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி.. ஒழுங்கா ஆடுங்க.. இல்ல சேட்டனுக்கு இடத்தை விடுங்க.. கடும் சிக்கலில் இளம் வீரர்!

Recommended Video

ஒழுங்கா ஆடுங்க.. இல்ல சஞ்சு சாம்சன் ரெடியா இருக்காரு - பண்டுக்கு எச்சரிக்கை

மும்பை : சஞ்சு சாம்சனை அணியில் தேர்வு செய்து ரிஷப் பண்ட்டுக்கு அணி நிர்வாகம் கடும் செய்தியை கூறி இருப்பதாக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் எச்சரித்துள்ளார்.

இந்திய அணியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்.

அவருக்கு மாற்றாக கேரள வீரர் சஞ்சு சாம்சனை அணியில் விக்கெட் கீப்பராக ஆட வைக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் முன்னாள் வீரர்கள் மத்தியில் இருப்பதால் பண்ட்டுக்கு தொடர்ந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது.

40 பந்தில் 80 ரன்.. தோனியின் ஷாட்டை அடித்து மிரட்டிய இந்திய வீரர்!40 பந்தில் 80 ரன்.. தோனியின் ஷாட்டை அடித்து மிரட்டிய இந்திய வீரர்!

பண்ட் சொதப்பல்

பண்ட் சொதப்பல்

ரிஷப் பண்ட் உலகக்கோப்பை தொடர் முதல் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருகிறார். எனினும், அவர் ரன் குவிப்பதில் தடுமாறி வருகிறார். தவறான ஷாட் அடித்து அவுட் ஆகிறார்.

பேட்டிங் சராசரி

பேட்டிங் சராசரி

ரிஷப் பண்ட்டின் பேட்டிங் சராசரி - 12 ஒருநாள் போட்டிகளில் 22.90 ஆகவும், 23 டி20 போட்டிகளில் 19.88 ஆகவும் உள்ளது. இது தற்போதைய இந்திய அணியின் வீரர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இது மிகவும் குறைந்த சராசரி ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் (118.15) குறைவாக உள்ளது

வாய்ப்பு

வாய்ப்பு

எனினும், ரிஷப் பண்ட்டுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகிறது இந்திய தேர்வுக் குழு. தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சொதப்பிய போது டெஸ்ட் அணியில் மட்டும் களமிறங்கும் வாய்ப்பை இழந்த பண்ட், டி20 போட்டிகளில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.

சஞ்சு சாம்சன் நிலை

சஞ்சு சாம்சன் நிலை

மறுபுறம், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சன் உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்து, வங்கதேச டி20 தொடரில் இந்திய உத்தேச அணியில் மாற்று பேட்ஸ்மேன் ஆக இடம் பெற்றார்.

மீண்டும் தேர்வு

மீண்டும் தேர்வு

அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடாத சஞ்சு சாம்சனுக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் முதலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர், தவான் காயத்தால் நீக்கப்பட்டதால் அணியில் வாய்ப்பு பெற்றார்.

பண்ட்டுக்கு எச்சரிக்கை

பண்ட்டுக்கு எச்சரிக்கை

சஞ்சு சாம்சன் தொடர்ந்து மாற்று வீரராக அணியில் இடம் பெற்று வரும் நிலையில், இது ரிஷப் பண்ட்டுக்கு இந்திய அணி நிர்வாகத்தால் விடுக்கப்படும் எச்சரிக்கை என விவிஎஸ் லக்ஷ்மன் கருத்து கூறி இருக்கிறார்.

கடும் செய்தி

கடும் செய்தி

"மாற்று வீரராக சஞ்சு சாம்சனை அணியில் சேர்த்து, அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழு கடும் செய்தி ஒன்றை விடுத்துள்ளனர். ரிஷப் பண்ட்டுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டு விட்டது. அணியில் அவருக்கு போதிய பாதுகாப்பு உள்ளது என்பதை அவர்கள் கூறி இருப்பார்கள் என நம்புகிறேன்" என லக்ஷ்மன் கூறி உள்ளார்.

நியாயம் செய்ய வேண்டும்

நியாயம் செய்ய வேண்டும்

"அதே சமயம், அந்த வீரர் அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவினர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நியாயம் செய்ய வேண்டும்" எனவும் கூறி பண்ட்டை எச்சரித்துள்ளார் லக்ஷ்மன்.

பண்ட் திறனை நம்புகிறேன்

பண்ட் திறனை நம்புகிறேன்

"துரதிர்ஷ்டவசமாக, பண்ட்டால் அதை செய்ய முடியவில்லை. ஆனால்,அவர்தான் அணியின் அதிரடி வீரர். பந்தை மைதானத்துக்கு வெளியே அடிக்கும் அவரது திறனால், அவர் போட்டியின் போக்கை மாற்றிக் காட்டுவார் என நான் இப்போதும் நம்புகிறேன்" எனவும் கூறினார் லக்ஷ்மன்.

சுதாரிப்பாரா பண்ட்?

சுதாரிப்பாரா பண்ட்?

ஒருபுறம் முன்னாள் வீரர்கள் பலரும் பண்ட்டை எச்சரித்து வரும் நிலையில், மறுபுறம் சஞ்சு சாம்சன் தன் வாய்ப்புக்காக கண்கொத்திப் பாம்பாக காத்துக் கொண்டு இருக்கிறார். ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலாவது சுதாரிப்பாரா?

Story first published: Friday, November 29, 2019, 14:13 [IST]
Other articles published on Nov 29, 2019
English summary
IND vs WI : Rishabh Pant has to play well or lose his spot to Sanju Samson. Recently, VVS Laxman warned Pant to perform well.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X