Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 செஞ்சுரி.. சுப்மன் கில், ரோஹித் சர்மா மரண அடி.. அரண்டு போன வெஸ்ட் இண்டீஸ்.. 405 அடிச்சும் வேஸ்ட்

குவஹாத்தி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 406 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடி ஆட்டம் ஆடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி, ஒரு விக்கெட் கூட இழக்காமல் 25 ஓவர்களிலேயே 250 ரன்களுக்கு மேல் குவித்து போட்டியை இந்தியா பக்கமாக மாற்றியது.

முன்னதாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. ஜான் கேம்ப்பெல் 101 ரன்களும், கேப்டன் ஷாய் ஹோப் 104 ரன்களும், அமீர் ஜாங்கு 114 ரன்களும் விளாசினர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அடித்த அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து கம்பீரமாக நின்றது.

IND vs WI Rohit Sharma and Shubman Gill Smash Centuries in Record Chase Against West Indies in 2nd ODI

406 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள், முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டனர். பவர்பிளே 10 ஓவர்களில் மட்டுமே விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் சுப்மன் கில் சற்றும் இரக்கமின்றி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்து வெறும் 62 பந்துகளில் சதமடித்தார்.

மறுமுனையில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 32 பந்துகளில் அரைசதம் கடந்து, 72 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் சதம் கடந்தார். அவர் 75 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து ODI வரலாற்றில் மாபெரும் ஸ்கோர் அடித்து சாதனை செய்த வெஸ்ட் இண்டீஸ்

இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து ODI வரலாற்றில் மாபெரும் ஸ்கோர் அடித்து சாதனை செய்த வெஸ்ட் இண்டீஸ்

அரண்டு போன வெஸ்ட் இண்டீஸ்

ஜெய்டன் சீல்ஸ், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், கீமோ பால் என எந்தவொரு வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளராலும் இந்த ஜோடியின் ரன் வேட்டையை கட்டுப்படுத்த முடியவில்லை. கீமோ பால் 3 ஓவர்களில் 49 ரன்களையும், அல்சாரி ஜோசப் 6 ஓவர்களில் 64 ரன்களையும் வாரி வழங்கினர்.
27 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்தது.

Story first published: Wednesday, September 30, 2026, 21:01 [IST]
Other articles published on Sep 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+