மைதானம் முழுவதும் ஒலிக்கப் போகும் அந்த இளம் வீரரின் பெயர்.. கடும் சிக்கலில் ரிஷப் பண்ட்!

திருவனந்தபுரம் : இந்திய அணி கேராளவில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்றது.

அப்போது விமான நிலையத்தில் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு மிகப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களை காட்டிலும் அவருக்கு தான் கோஷம் அதிகமாக இருந்தது.

அதிரடி திட்டங்கள்

அதிரடி திட்டங்கள்

அதைக் கண்ட மற்ற மாநில ரசிகர்களுக்கு வியப்பு ஏற்பட்டது. சஞ்சு சாம்சன் கொஞ்சம் ஓவராக வந்த கோஷத்தை கண்டு வெட்கப்பட்டுக் கொண்டே பேருந்தில் ஏறிச் சென்றார். ஆனால், இது ட்ரைலர் தான். பின்னாடியே கேரள ரசிகர்கள் வேறு பல அதிரடி திட்டங்கள் வைத்து இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது டி20 போட்டி

இரண்டாவது டி20 போட்டி

இரண்டாவது போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் தங்கள் மாநிலத்தை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் அளிக்க வேண்டும் என கேரள ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சொந்த மண்ணில் வாய்ப்பு?

சொந்த மண்ணில் வாய்ப்பு?

சஞ்சு சாம்சன் இந்திய அணியில் 2015ஆம் ஆண்டிற்குப் பின் இடம் பெற்றாலும், ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பை பெறவில்லை. இந்த நிலையில், சொந்த மண்ணில் நடக்கும் போட்டியிலாவது அவருக்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பார்க்கலாம் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

கோஷம் எழுப்பினர்

கோஷம் எழுப்பினர்

இந்த கோரிக்கையின் ஒரு பகுதியாக சில ரசிகர்கள், இந்திய அணி விமான நிலையம் வரும் போது சஞ்சு சாம்சன் பெயரை கூறி, பெரிய கோஷம் எழுப்பி விமான நிலையத்தை அதிர வைத்தனர்.

ஆச்சரியம்

விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் கடந்து சென்ற போது கூட கேட்காத கோஷம், அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என ஏக்கத்தில் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

வாய்ப்பு வேண்டும்

வாய்ப்பு வேண்டும்

இந்த சம்பவத்தை கேரள ரசிகர்கள் திட்டமிட்டே செய்துள்ளதாக தெரிகிறது. தங்கள் மண்ணை சேர்ந்த, நல்ல பார்மில் இருக்கும் வீரருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இப்படி செய்துள்ளனர் ரசிகர்கள்.

வெறும் ட்ரைலர்

வெறும் ட்ரைலர்

விமான நிலையத்தில் நடந்தது வெறும் ட்ரைலர் தானாம். போட்டி நடக்கும் போது மைதானத்தில் இதை விட பல மடங்கு பலத்த கோஷம் எழுப்ப திட்டம் தயாராக உள்ளதாக மைதான நிர்வாகிகளே கூறி வருகின்றனர்.

பண்ட் நீக்கினால்..

பண்ட் நீக்கினால்..

குறிப்பாக, விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற எளிய வழி சமீப காலமாக சொதப்பி வரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை அணியை விட்டு நீக்குவது மட்டுமே. இது தான் கேரள மாநில ரசிகர்ளின் திட்டம் என கூறப்படுகிறது.

சொதப்பல் செய்தால்..

சொதப்பல் செய்தால்..

இரண்டாவது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் ஏதேனும் சொதப்பல் செய்தால், மற்ற மைதானங்களில் தோனி பெயரை கோஷம் இடுவது போல, கேரளாவில் சஞ்சு சாம்சன் பெயரை வைத்து கோஷம் எழுப்ப இருக்கிறார்கள் ரசிகர்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI : Sanju Samson got a hero welcome in his hometown
Story first published: Sunday, December 8, 2019, 19:07 [IST]
Other articles published on Dec 8, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X