
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்
வலுவான வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் தோல்வியடைந்திருந்தாலும், உள்நாட்டில் மிக அதிக வெற்றி சதவீதத்தை வைத்துள்ளது. ரோகித் சர்மாவும் தனது கேப்டன்சியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மறு புறம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்று முழு நம்பிக்கையுடன் களமிறங்கவுள்ளது.

பொல்லார்ட் எதிர்பார்ப்பு
இந்நிலையில் இந்திய அணியை வீழ்த்த ஆவலுடன் இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெயீரன் பொல்லார்ட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இங்கிலாந்தில் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுள்ளோம். இதே வெற்றியை இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் படைப்போம். அதுவும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்வதில் தனி ஆர்வம் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒருநாள் போட்டிக்கென்று ஸ்பெஷல் வீரர்கள் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்களின் செயல்பாடுகள் இந்திய அணியை திணறிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஷமி நம்பிக்கை
இதே போல வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர் டேரன் ஷமி அதீத நம்பிக்கை வைத்துள்ளார். அவர், பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக கேப்டன் கெய்ரன் பொல்லார்ட் சிறப்பாக எங்களை வழிநடத்துவார் என நம்புகிறேன். பொல்லார்ட் பல ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவருக்கு இந்திய காலநிலை, பிட்ச்களின் நிலை குறித்து முழுவதுமாக தெரியும் என்பதால் சுலபமாக வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு தலைவலி
ஷமி கூறியதை போல கெய்ரன் பொல்லார்ட், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்ட பல முக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருபவர்கள். அவர்களுக்கு இந்திய களங்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து நன்கு தெரியும் என்பதால் இந்தியாவுக்கு சற்று சவாலான போட்டியாக இது இருக்கப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications
