முழு உடல்தகுதியுடன் இருந்தும் ஹர்திக் பாண்டியா நீக்கம் ஏன்? பழிவாங்கப்பட்டாரா ஹர்திக்..??
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக விளங்கி வந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் இருந்தார்.
அதற்கு முன்பு அணியில் இருந்தாலும், அவரால் பந்துவீச முடியாமல் இருந்தது. வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்தார்.
ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு ஹர்திக் தேவையில்லை. ஆல் ரவுண்டராக தான் தேவை என்று விமர்சனங்கள் எழுந்தன.

தீவிர பயிற்சி
இதனையடுத்து முழு உடல் தகுதியை பெற்று, தம்மால் பந்துவீச முடியும் என்ற நிலைக்கு வந்தால் மட்டுமே அணிக்கு திரும்புவேன் என்று ஹர்திக் பாண்டியா சபதம் எடுத்தார். அதற்கு ஏற்றார் போல் ஹர்திக் பாண்டியா கடந்த ஒன்றரை மாதமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

பந்துவீச தயார்
இதனால் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க தொடரில் தம்மை அணியில் சேர்க்க வேண்டாம் என்று ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார். தற்போது அவர் முழு உடல் தகுதியை எட்டி, பந்துவீச்சிலும் ஈடுபடுகிறார். இதனையடுத்து அவரை ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் அணி 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

ஹர்திக் அதிர்ச்சி
தாம் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தயார் என்று ஹர்திக் பாண்டியா அறிவித்தார். இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வுக்குழுவினர் ஹர்திக் பாண்டியாவை அணியில் தேர்வு செய்யவில்லை. தாம் பயிற்சி எடுப்பதால் இந்திய அணியில் என்னை சேர்க்க வேண்டாம் என்று ஹர்திக் பாண்டியா கூறியதால் அதிருப்தியில் இருந்த தேர்வுக்குழுவினர் இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியானது.
Recommended Video

ஐ.பி.எல். தொடர்
ஆனால், கடந்த 6 மாதத்திற்கு மேலாக ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை. இதனால், அவரை நேரடியாக அணியில் சேர்க்க முடியாது. ஐ.பி.எல். தொடரில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்த்துவிட்டு, அதன் பின்னர் முடிவு எடுக்கலாம் என்று தேர்வுக்குழுவினரும், ரோகித் சர்மாவும் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. தற்போது ஹர்திக் பாண்டியாவுக்கு கூடுதலாக ஒரு மாத காலம் கிடைத்துள்ளதால் அவர் மீண்டும் தனது பயிற்சியை தொடங்க உள்ளார்.


Click it and Unblock the Notifications