For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி.. இவரை இன்னுமா சும்மா வைச்சுருக்கீங்க? வெ.இண்டீஸ்-ஐ காலி பண்ண காத்திருக்கும் மிரட்டல் வீரர்!

Recommended Video

IND vs WI: Will kohli give him a chance to play the last match ?

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முகமது ஷமி அணியில் சேர்க்கப்படுவாரா? என்ற விவாதம் விமர்சகர்கள் இடையே எழுந்துள்ளது.

மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலையில், அனுபவ வீரர் ஷமியை அணியில் சேர்த்தால், அது அணியில் பலவீனமாக இருக்கும் பந்துவீச்சை பலப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

டி20 தொடர்

டி20 தொடர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1 - 1 என சமநிலையில் உள்ளன.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20யில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும். இதில் தோல்வி அடையும் அணி தொடரை இழக்க நேரிடும். அதிரடி பேட்டிங் வரிசை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை விட ஒரு படி முன்னே உள்ளது.

இந்திய அணியின் பலவீனம்

இந்திய அணியின் பலவீனம்

இந்திய அணி இரண்டு விஷயங்களில் பலவீனமாக உள்ளது. ஒன்று பீல்டிங், மற்றொன்று பந்துவீச்சு. இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள், மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் கொண்ட அணியுடன் களமிறங்கி வருகிறது.

வேகப் பந்துவீச்சு திணறல்

வேகப் பந்துவீச்சு திணறல்

வேகப் பந்துவீச்சில் தீபக் சாஹர் மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் தங்கள் முத்திரையை பதிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில் தான் முகமது ஷமிக்கு மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஷமி நிலை

ஷமி நிலை

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான உத்தேச அணியில் இடம் பெற்றும் போட்டிகளில் ஆடாமல் இருக்கும் முகமது ஷமியை நிச்சயம் வெற்றி பெற வேண்டிய மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் கோலி களமிறக்க வேண்டும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

உச்சகட்ட பார்மில் ஷமி

உச்சகட்ட பார்மில் ஷமி

ஷமி கடந்த வங்கதேச டெஸ்ட் தொடரில் மிரட்டும் வகையில் பந்துவீசி தன் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பார்மில் இருக்கிறார். துல்லியமாக பந்து வீசி வரும் அவர் டி20 உலகக்கோப்பை தொடரிலும் நிச்சயம் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனினும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டியே அவர் இந்த டி20 தொடரில் அணியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

யாரை நீக்கலாம்?

யாரை நீக்கலாம்?

ஷமி அணியில் இடம் பெறும் நிலையில், புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்து வீசியும் அவரால் அதிரடி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அச்சுறுத்த முடியவில்லை.

கோலி முடிவு

கோலி முடிவு

ஷமி அணியில் இடம் பெறுவாரா? இல்லையா? என்பது கேப்டன் கோலியின் கைகளில் தான் உள்ளது. கோலி அணியை மாற்ற எப்போதும் யோசிக்க மாட்டார் என்பதால், மூன்றாவது டி20யில் நிச்சயம் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, December 11, 2019, 12:00 [IST]
Other articles published on Dec 11, 2019
English summary
IND vs WI : Shami could win the match for India in 3rd T20 against West Indies
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+