For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது சரிப்பட்டு வராது.. சீனியர் வீரரை கழட்டிவிட தயாராகும் இந்திய அணி.. விரைவில் கிளைமாக்ஸ்!

Recommended Video

Shikar Dhawan may lose his chance in Indian team

மும்பை : இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் பேட்டிங்கில் பார்ம் அவுட் ஆக இருக்கிறார். தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

அவருக்கு ஏற்கனவே அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், அடுத்து நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டி20 போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் அவருக்கு வில்லனாக மாறி உள்ளது.

ஒருவேளை தவான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்டால், அதன் பின் அவர் சர்வதேச போட்டிகளில் இடம் பெற முடியுமா? என்பதும் சந்தேகத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தவான் காயம்

தவான் காயம்

உலகக்கோப்பை தொடரின் போது ஷிகர் தவான் காயம் அடைந்தார். அப்போது அவர் சிறப்பான பார்மில் இருந்தார். எனினும், காயம் அவரை உலகக்கோப்பை தொடரில் பாதியில் ஆட விடாமல் செய்தது.

திணறல் பேட்டிங்

திணறல் பேட்டிங்

அதன் பின் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற தவான் வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா தொடரில் தன் இயல்பான ஆட்டத்தை ஆடவில்லை. அதிக பந்துகளை வீணடிப்பது மற்றும் கட்டுப்பாடு இல்லாத பேட்டிங்கால் திணறி வந்தார்.

வங்கதேச தொடர் ஆட்டம்

வங்கதேச தொடர் ஆட்டம்

இந்த நிலையில், வங்கதேச டி20 தொடரில் அவரது பேட்டிங் குறித்து அனைவரும் உற்று கவனித்து வந்தனர். அந்த தொடரில் அவர் ஓரளவு ரன் எடுத்தாலும், மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.

விமர்சனம்

விமர்சனம்

டி20 போட்டிகளில் ஒரு பந்துக்கு ஒரு ரன் வீதம் எடுப்பது அணிக்கு பாதகமாக முடியும். டி20 போட்டிகளுக்கு தவான் சரிப்பட்டு வர மாட்டார் என அவர் மீது விமர்சனம் எழுந்தது. 34 வயதை எட்ட இருக்கும் தவானுக்கு இது பெரும் அழுத்தத்தை கொடுத்தது.

இளம் வீரர்கள் காத்திருப்பு

இளம் வீரர்கள் காத்திருப்பு

இளம் வீரர்கள் பலர் துவக்க வீரர்களாக அணியில் இடம் பெற காத்துக் கொண்டு இருக்கும் நிலையில், வங்கதேச தொடரில் சறுக்கிய தவான், உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்றார்.

உள்ளூர் போட்டிகள் சொதப்பல்

உள்ளூர் போட்டிகள் சொதப்பல்

அந்த தொடரில் நிரூபித்து அணிக்குள் தன் இடத்தை தக்க வைப்பார் என்ற எண்ணத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சையது முஷ்டாக் அலி தொடரில் பலமும், அனுபவமும் குறைந்த அணிகளை எதிர்த்து கூட அவரால் ரன் குவிக்க முடியவில்லை. அவர் எடுத்த ரன்கள் இது தான் ஜம்மு - காஷ்மீர் - 0 (9 பந்துகள்), ஜார்கண்ட் - 9 (6), சிக்கிம் - 19 (18), ஒடிசா - 35 (33).

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

இந்த நிலையில், தவானுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம் கிடைக்காது என்றே பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது. அவருக்கு பதில் இளம் வீரர்களில் ஒருவர் துவக்க வீரராக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு

மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு

டெஸ்ட் அணியில் கலக்கி வரும் மயங்க் அகர்வால், உலகக்கோப்பை தொடரிலேயே அணியில் இடம் பெற்றார். எனினும், களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. சிறப்பான பார்மில் இருக்கும் அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கலாம்.

ஷுப்மன் கில் காத்திருப்பு

ஷுப்மன் கில் காத்திருப்பு

அதே போல, இளம் வீரர் ஷுப்மன் கில் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளிலும், இந்தியா ஏ அணிக்காகவும் அதிரடி ஆட்டம் ஆடியும் இந்திய அணியில் நிலைத்த வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார். சில முறை வாய்ப்பு கிடைத்தாலும் பெஞ்சில் அமர வேண்டிய நிலை தான் உள்ளது. எனவே, இவர் தவான் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

கிளைமாக்ஸ் என்ன?

கிளைமாக்ஸ் என்ன?

வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணித் தேர்வு நவம்பர் 21 அன்று நடைபெற உள்ளது. அப்போது தவான் நிலை குறித்து தெரியவரும். ஒருவேளை ஒருநாள் அணியில் தவான் இடம் பெற்று, டி20 அணியில் இடம் பெறாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Thursday, November 21, 2019, 9:34 [IST]
Other articles published on Nov 21, 2019
English summary
IND vs WI : Shikar Dhawan may lose his chance in Indian team
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+