For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெ.இண்டீஸ் தொடரில் முக்கிய இந்திய வீரர் திடீர் நீக்கம்.. அதிரடி முடிவு.. கசிந்த ரகசியம்!

Recommended Video

India vs West Indies T20 squad and ODI squad announced

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் டி20 தொடர் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

அந்த தொடருக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அப்போது ஷிகர் தவான் பெயர் இடம் பெற்று இருந்த நிலையில் தற்போது அவர் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட இருப்பதாக ஹிந்துவில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 6 முதல் துவங்க உள்ளது. அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தொடர் நடைபெற உள்ளது.

தவான் நிலை

தவான் நிலை

இந்த தொடருக்கான அணியில் தவான் இடம் பெறுவாரா? என்று முதலில் ஒரு சந்தேகம் இருந்தது. டி20 போட்டிகளில் தவானின் சமீப கால நிதானமான பேட்டிங் தான் அதற்கு காரணம்.

வங்கதேச தொடர்

வங்கதேச தொடர்

வங்கதேச டி20 தொடரில் தவான் ஒவ்வொரு போட்டியிலும் நூறை ஒட்டிய ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ரன் குவித்தார். அவர் அதிக ரன்கள் எடுத்தாலும் ஸ்ட்ரைக் ரேட் கவலை அளிக்கும் வகையில் இருந்தது.

உள்ளூர் டி20 தொடர்

உள்ளூர் டி20 தொடர்

வங்கதேச டி20 தொடருக்குப் பின் தவான், தன் பேட்டிங் பார்மை மீட்கும் வகையில் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் பங்கேற்றார். அந்த தொடரிலும் சுமாராகவே ஆடி வந்தார் அவர்.

உள்ளூர் தொடரில் காயம்

உள்ளூர் தொடரில் காயம்

இந்த நிலையில், அவர் ஒரு போட்டியில் அவர் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவர் சிகிச்சை முடிவடைந்து கிரிக்கெட் ஆட திரும்புவார் என கூறப்பட்டது.

அணியில் சேர்ப்பு

அணியில் சேர்ப்பு

இந்த நிலையில், அவரது காயம், ஸ்ட்ரைக் ரேட் குறைபாடு ஆகியவற்றை பற்றி கருத்தில் கொள்ளாத தேர்வுக் குழு அவருக்கு தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணியில் இடம் அளித்தது.

திடீர் நீக்கம்

திடீர் நீக்கம்

இந்த நிலையில், அவரது காயம் இன்னும் குணமாகாத நிலையில், அவரால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சரியாக ஆட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், அவர் அந்த தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அறிவிப்பு வெளியாகும்

அறிவிப்பு வெளியாகும்

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. தவான் முதலில் நடக்க இருக்கும் டி20 தொடரில் இருந்து மட்டும் நீக்கப்படுவாரா? அல்லது ஒருநாள் தொடரிலும் சேர்த்து நீக்கப்படுவாரா? என்பது அறிவிப்பு வந்த பின்னரே தெரிய வரும்.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

தவானுக்கு பதிலாக மாற்று வீரராக சஞ்சு சாம்சன் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. அவர் வங்கதேச டி20 தொடரில் உத்தேச அணியில் இடம் பெற்று, ஒரு போட்டியில் கூட ஆடாமல் இருந்தார்.

அணியில் இடம்

அணியில் இடம்

சஞ்சு சாம்சனுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் முதலில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது தவான் நீக்கம் காரணமாக அவர் அணியில் இடம் பெற இருக்கிறார்.

Story first published: Wednesday, November 27, 2019, 14:55 [IST]
Other articles published on Nov 27, 2019
English summary
IND vs WI : Shikar Dhawan will be ruled out of West Indies series, due to his knee injury
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+