For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்!

சென்னை : கேப்டன் விராட் கோலி இளம் வீரர் சிவம் துபேவை ஒருநாள் போட்டியில் அறிமுகம் செய்து ஆச்சரியம் அளித்தார்.

டி20 போட்டிகளில் சமீபத்தில் அறிமுகம் ஆன துபே யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒருநாள் போட்டியில் அறிமுகம் பெற்றுள்ளார்.

ஹர்திக் பண்டியா நீண்ட நாட்களாக காயத்தில் இருக்கும் நிலையில், அவரது இடத்தை நிரப்ப சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பகல் - இரவு போட்டியாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் செய்தது.

சிவம் துபே சேர்ப்பு

சிவம் துபே சேர்ப்பு

இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். இவர் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

அந்த தொடரில் பெரிதாக ரன் குவிக்காவிட்டாலும், ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். அதை அடுத்து நடந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய உத்தேச அணியில் அவரது பெயர் இடம் பெற்றது.

அதிரடி அரைசதம்

அதிரடி அரைசதம்

அவர் டி20 தொடரில் ஒரு போட்டியில் 27 பந்துகளில் 54 ரன்கள் குவித்து தன் பேட்டிங்கை நிரூபித்தார். எனினும், அவர் டி20 அணியில் மட்டுமே இடம் பெறுவார். ஒருநாள் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

அறிமுகம்

அறிமுகம்

எனினும், ஒருநாள் அணியில் அவரை அறிமுகம் செய்துள்ளார் கேப்டன் விராட் கோலி. இந்த முடிவுக்கு முக்கிய காரணம், ஆல் - ரவுண்டர் ஹர்திக் பண்டியா காயத்தில் இருப்பது தான் என்று நம்பப்படுகிறது.

ஹர்திக் பண்டியா காயம்

ஹர்திக் பண்டியா காயம்

ஹர்திக் பண்டியா நீண்ட காலமாக காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். இந்த ஆண்டில் மட்டும் பல சர்வதேச போட்டிகளில் அவர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

ஆல் - ரவுண்டர் தேவை

ஆல் - ரவுண்டர் தேவை

அதிரடியாக பேட்டிங் ஆடும் பண்டியா, பந்துவீச்சிலும் அணியின் கூடுதல் வேகப் பந்துவீச்சாளராக திகழ்ந்தார். அது போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. விஜய் ஷங்கரை இந்தியா பயன்படுத்திப் பார்த்ததில் திருப்தி ஏற்படவில்லை.

மும்பை வீரர் துபே

மும்பை வீரர் துபே

இந்த நிலையில் தான் மும்பையை சேர்ந்த இளம் வேகப் பந்து வீச்சு ஆல் - ரவுண்டர் சிவம் துபே டி20 அணியில் இடம் பெற்று, தற்போது ஒருநாள் அணியிலும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

முதல் ஒருநாள் போட்டியில் ஆடும் இந்திய அணி விவரம் - ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ், சிவம் துபே (அறிமுகம்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி.

Story first published: Sunday, December 15, 2019, 16:51 [IST]
Other articles published on Dec 15, 2019
English summary
IND vs WI : Shivam Dube debut in Chennai in first ODI against West Indies.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+