Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: “இந்தியாவை பார்த்து பயப்பட மாட்டோம்”.. தில்லாக பேசிய வெஸ்ட் இண்டீஸ் கோச்.. என்ன சொன்னார்?

மும்பை: இந்திய மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்வது என்பது எந்தவொரு கிரிக்கெட் அணிக்கும் ஒரு கடினமான சவால். ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி, அடுத்த மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள தனது அணி பயப்படவில்லை என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்ததை சுட்டிக்காட்டி, இந்த முறை தாங்களும் சாதித்துக் காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன் அவர் இருக்கிறார்.

அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 1983-84 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்தியதில்லை. இத்தகைய நீண்ட கால சாதனை இடைவெளியை உடைக்கும் முனைப்புடன் மேற்கிந்திய தீவுகள் அணி இந்த முறை களம் காண்கிறது.

Darren Sammy West Indies Indian Cricket Team Test Cricket

கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. அந்தத் தொடரில் அவர்கள் வெளிப்படுத்திய உத்திகளையும், இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்ட விதத்தையும் தாங்களும் பின்பற்றி வெற்றி காண முடியும் என சமி கூறி இருக்கிறார்.

விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு, சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி அனுபவம் குறைந்த அணியாகவே உள்ளது. இந்த மாற்றத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள மேற்கிந்திய தீவுகள் அணி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தங்களது வேகப்பந்து வீச்சு படையின் மீது சமி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். ஷமார் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் அல்சாரி ஜோசப் போன்ற திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் தங்களது திறமையை வெளிப்படுத்தக் கூடியவர்கள் என்று அவர் கூறி இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய டேரன் சமி, "நாங்கள் இந்தியாவிற்குச் சென்று வெற்றி பெறும் மனநிலையுடன் தான் செல்கிறோம். 'ஓ, இது இந்தியா' என்று நினைத்து நாங்கள் அங்கு செல்லவில்லை. நியூசிலாந்து அணி அங்கு சென்று நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடியது, அதிலிருந்து நாங்கள் உத்வேகம் பெறுவோம்" என்று குறிப்பிட்டார்.

"எங்களிடம் எந்தவொரு சூழ்நிலையிலும் செயல்படக்கூடிய ஒரு வேகப்பந்து வீச்சு தாக்குதல் உள்ளது. ஷமார் ஜோசப் தனது வேகத்தாலும், ஜெய்டன் சீல்ஸ் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யும் திறனாலும், அல்சாரி ஜோசப் தனது உயரம் மற்றும் பவுன்ஸாலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக் கூடியவர்கள். இந்தியாவில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகவும் முக்கியம், அதைச் செய்யக்கூடிய பந்துவீச்சு வரிசை எங்களிடம் உள்ளது" என்று சமி தெரிவித்தார்.

42 ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்லாத குறையை இந்த முறை போக்க வேண்டும் என்ற உறுதியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வருகிறது. நியூசிலாந்தின் வெற்றி அவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது, அந்த நம்பிக்கையுடன் அவர்கள் களமிறங்கும் போது, இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு கடுமையான போட்டியை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Friday, September 19, 2025, 18:54 [IST]
Other articles published on Sep 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+