டோமினிக்கா : மேற்கிந்த தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடுகிறது.இந்த தொடருக்காக பயிற்சி செய்யும்போது மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் இந்திய அணி வீரர்களை சந்திக்க வந்தார்.
அப்போது சுப்மன் கில்லை அழைத்து அவருக்கு அறிமுகம் செய்து வைத்த டிராவிட், எங்கள் அணியின் எதிர்காலம் நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான் என்று பாராட்டினார். ஏற்கனவே கில் ஒரு நாள் டி20 என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார்.

ஆனால் அதே ஒரு ஃபார்மை டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் இன்னும் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏன் நடுவரிசை வீரராக விளையாட வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். இதுவரை கில் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 921 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி 32 ஆகும். 4 அரை சதமும், இரண்டு சதமும் அடித்திருக்கிறார். அவர் அடித்த இரண்டு சதமுமே இந்தியா மற்றும் வங்கதேசத்தில் தான் அடித்திருக்கிறார்.
இதனால் தொடக்க வீரராக கில் தன்னுடைய முழு திறமையையும் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தவில்லை என்பது தெரிகிறது. கில் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் நடு வரிசையில்தான் விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் தொடக்கத்தில் ஆளில்லை என்பதற்காக அவரை ரவி சாஸ்திரி ஓப்பனிங் இறக்கிவிட்டு தவறு செய்து விட்டார். எப்போதுமே சிறந்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவரிசையில் தான் களமிறங்குவார்கள்.
டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர்,பிரைன் லாரா விராட் கோலி, ஸ்மித்,போன்ற வீரர்கள் எல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று முதல் ஐந்தாவது இடம் வரை களமிறங்குவார்கள். இதற்கு காரணம் நடுவரிசையில் விளையாடும் போது தான் பேட்டிங்கிற்கு சாதகமான சூழல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படும். இதனை பயன்படுத்திக் கொண்டு திறமையான வீரர்கள் மிகப் பெரிய ஸ்கோரை அடித்து அணியை காப்பாற்றுவார்கள்.
இதனால் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கருதப்படும் சுப்மன் கில், இனி நடுவரிசையில் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். தொடக்க வீரராக களமிறங்கும் நபர்கள் பந்தை முடிந்த அளவிற்கு பழையதாக்கி பின் வரிசையில் விளையாடும் வீரர்களுக்கு ஏற்ற சூழலை தர வேண்டும்.
எப்போதுமே போரில் முதலில் சிப்பாய்கள் தான் செல்வார்கள் அரசன் பின்பு தான் வருவார் அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து ஸ்விங்க் ஆகும்போது சிப்பாய்களில் அனுப்பிவிட்டு பலம் வாய்ந்தவர்கள் நடு வரிசையில் தான் களமிறங்க வேண்டும் அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் நடு வரிசையில் விளையாடும் போது வந்து அந்த அளவுக்கு ஸ்விம்மிங் ஆகாது இதன் மூலம் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடி ரன் சேர்க்க வேண்டும்.
இந்தப் பணிக்கு கில் போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தேவை இல்லை. எப்போதுமே ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்கள் டாப் வரிசையிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மென்கள் நடு வரிசையில் தான் விளையாடுவார்கள். இதற்கு சச்சின் நல்ல உதாரணம்.
அந்த வகையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை எப்போதோ நிரூபித்து விட்ட கில், டெஸ்டிலும் நடு வரிசையில் அவர் விளையாடினால் நிச்சயம் சதங்கள் அவருடைய பேட்டில் இருந்து குவியும். இதன் மூலம் நம்பர் மூன்று அல்லது ஐந்து ஆகிய இடத்தில் கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து களமிறங்குவது அவருக்கு சாதகமாகும்.