Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI - சுப்மன் கில் பேட்டிங் வரிசை மாற்றம் ஏன்? நான் காரணம் இல்லை.. உண்மையை உடைத்த ரோகித்

டோமினிக்கா : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதிலிருந்து அதிரடி மாற்றங்கள் ஒன்றுக்கு பின் ஒன்றாக நடந்து வருகிறது.

இந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா நீக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த இடத்திற்கு சுப்மன் கில் வந்திருக்கிறார்.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் இன்று தொடங்கும் நிலையில் ரோகித் சர்மா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Rohit sharma reveals the reason about shumban gill batting order change

எனினும் கில் திடீரென்று பேட்டிங் வரிசை மாற்றப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். அதன்படி இந்த முடிவை நான் எடுக்கவில்லை சுப்மன் கில் தான் மூன்றாவது வீரராக களம் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

இது தொடர்பாக அவர் என்னிடமும் பயிற்சியாளர் டிராவிட் இடமும் ஆலோசனை நடத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங்கில் வந்து விளையாடுவதை விட நம்பர் மூன்றாவது வீரராக பேட்டிங் வரிசையில் விளையாடினால் என்னால் மேலும் இந்திய அணிக்கு பங்களிப்பை கொடுக்க முடியும் என்று கில் தெரிவித்தார்.

இதன் காரணமாகத்தான் தொடக்க வீரராக ஜெய்ஸ்வாலை தேர்வு செய்து இருக்கிறோம். ஜெய்ஸ்வால் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் தொடக்கத்தில் வலது இடது என்ற காம்பினேஷன் இந்திய அணிக்கு கிடைக்கும். மேலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக தான் முகமது சமி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இடம்பெறவில்லை. மேலும் முகமது சிராஜிக்கு டி20 தொடரில் அதற்கு தான் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.

உலகக்கோப்பை தொடருக்கு எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அதற்காகத்தான் பல திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கின்றோம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.ரோகித் சர்மாவின் கூற்றுப்படி கில் தன்னுடைய திறமையை நிரூபித்து சதங்களை குவிக்க தொடங்கி விட்டால் இனி புஜாராவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 12, 2023, 6:10 [IST]
Other articles published on Jul 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+