Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள்.. இரண்டே வார்த்தையில் ஏமாற்றிய கேப்டன் கோலி!

திருவனந்தபுரம் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா முதல் போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கியது.

ஆனால், அது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. கேப்டன் கோலி டாஸ் நிகழ்வின் போது அணியில் குறிப்பிட்ட இளம் வீரரை அணியில் சேர்ப்பார் என எதிர்பார்த்து மைதானத்தில் காத்திருந்த கேரள கிரிக்கெட் ரசிகர்கள், கோலியின் வார்த்தைகளை கேட்டு ஏமாற்றம் அடைந்தனர்.

காத்திருக்கும் சஞ்சு சாம்சன்

காத்திருக்கும் சஞ்சு சாம்சன்

கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் வங்கதேச டி20 தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் மாற்று வீரராக அணியில் இடம் பெற்றுள்ளார். அவருக்கு இந்த தொடர்களில், போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு

ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு

விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தன்னை நிரூபிக்கவில்லை என்றாலும் அவருக்கு நீண்ட வாய்ப்பு அளிக்கப்படும் என இந்திய அணி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அதனால், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

கேரளாவில் நடக்கும் போட்டி

கேரளாவில் நடக்கும் போட்டி

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி இருந்தது.

ரசிகர்கள் ஆவல்

கேரள மாநில கிரிக்கெட் ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு விமான நிலையத்திலும், மைதானத்தில் பயிற்சியின் போதும் பெரிய அளவில் கோஷம் எழுப்பி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர் இரண்டாவது டி20 போட்டியில் ஆடுவார் என ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தனர்.

டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

டாஸ் போட வந்த கேப்டன் கோலி என்ன சொல்லப் போகிறார் என காத்திருந்தனர் ரசிகர்கள். டாஸில் கோலி தோல்வி அடைந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

அணி அறிவிப்பு

அணி அறிவிப்பு

கோலி இந்தப் போட்டியில் களமிறங்கும் அணி குறித்து பேசும் போது, "அதே அணி" என எளிமையாக இரண்டே வார்த்தையில் முடித்து விட்டார். சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறுவார் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடும் கோஷம் எழும்

கடும் கோஷம் எழும்

எனினும், இந்தப் போட்டியின் இடையே நிச்சயம் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கோஷம் எழும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரிஷப் பண்ட் சொதப்பும் போது, சஞ்சு சாம்சன் பெயர் விண்ணை எட்டும் அளவுக்கு ஒலிக்கும்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இரண்டாவது டி20 போட்டியில் ஆடும் இந்திய வீரர்கள் - ரோஹித் சர்மா, ராகுல், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல்

Story first published: Sunday, December 8, 2019, 20:03 [IST]
Other articles published on Dec 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+