Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வி அடைந்தாலும்.. இளம் வீரரை வைத்து கேப்டன் கோலி போட்ட திட்டம் வெற்றி!

Recommended Video

IND vs WI | இளம் வீரருக்கு தன் இடத்தை விட்டு கொடுத்த கோலி

திருவனந்தபுரம் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் கோலி தான் பேட்டிங் ஆடும் இடத்தை இளம் வீரர் ஒருவருக்கு அளித்தார்.

யாரும் எதிர்பாராத நிலையில் பேட்டிங் வரிசையில் இந்த திடீர் மாற்றத்தை செயல்படுத்திய கேப்டன் கோலி அதில் வெற்றியும் கண்டார்.

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும், கோலியின் இந்த திட்டம் வெற்றி பெற்றது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இரண்டாவது டி20 போட்டி

இரண்டாவது டி20 போட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளம் என்பதால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாது என்றே கருதப்பட்டது. .

மோசமான துவக்கம்

மோசமான துவக்கம்

துவக்க வீரர் ராகுல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு துவக்க வீரர் ரோஹித் சர்மாவும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா மோசமான துவக்கம் பெற்றது.

கோலி களமிறங்கவில்லை

கோலி களமிறங்கவில்லை

வழக்கமாக மூன்றாம் வரிசையில் பேட்டிங் இறங்கும் விராட் கோலி அந்த இடத்தில் களமிறங்கவில்லை. அவர் நான்காம் வரிசையில் களமிறங்கினார். தன் இடத்தை இளம் வீரர் சிவம் துபேவுக்கு வழங்கினார்.

சிவம் துபே அதிரடி

சிவம் துபே அதிரடி

முதலில் நிதானம் காட்டிய சிவம் துபே பின்னர் அதிரடிக்கு மாறினார். 30 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ரன் குவிக்க தடுமாறி வந்த இந்திய அணிக்கு திருப்பம் கொடுத்தார்.

4 சிக்ஸர்

4 சிக்ஸர்

சிவம் துபே தன் பேட்டிங்கில் நான்கு சிக்ஸர், மூன்று ஃபோர் அடித்து மிரட்டினார். அவருக்கு அடுத்து ரிஷப் பண்ட் 22 பந்துகளில் 33 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியா 170 ரன்கள்

இந்தியா 170 ரன்கள்

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களே எடுத்தனர். 16 ஓவர்களில் 140 ரன்கள் குவித்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதிக ரன் எடுத்த வீரர்

அதிக ரன் எடுத்த வீரர்

இந்தப் போட்டியில் இந்திய வீரர்களில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்ந்தார் சிவம் துபே. அந்த வகையில் பேட்டிங் வரிசையில் திடீர் மாற்றம் செய்த கேப்டன் கோலியின் முடிவு சரியாக அமைந்தது.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

அந்த ஒரு விஷயம் மட்டுமே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. பேட்டிங்கில் 170 ரன்கள் குவித்த இந்திய அணி இந்தப் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்த திட்டம் தொடருமா?

இந்த திட்டம் தொடருமா?

பேட்டிங் வரிசை மாற்றம் தற்காலிகமானதா? அல்லது இது இனி வரும் போட்டிகளிலும் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் கோலி துபேவை மூன்றாம் வரிசையில் களமிறக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Story first published: Monday, December 9, 2019, 19:52 [IST]
Other articles published on Dec 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+