For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உஷ்ஷ்ஷ்.. வாயை பொத்துங்க! கோலியை பழிக்குப் பழி வாங்கி.. கிண்டல் செய்த வெ.இண்டீஸ் வீரர்

Recommended Video

India vs West Indies T20 | 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது வெ.இண்டீஸ்

திருவனந்தபுரம் : வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் - விராட் கோலி இடையே ஆன வேடிக்கையான மோதல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேஸ்ரிக் வில்லியம்ஸ், கோலியை கிண்டல் செய்ததை நினைவில் வைத்து, கடந்த டி20 போட்டியில் திருப்பி சிக்ஸ் அடித்து பதிலடி கொடுத்து கேலி செய்தார் கோலி.

இரண்டாவது டி20 போட்டியில் கோலி விக்கெட்டை வீழ்த்திய வில்லியம்ஸ், வாயில் கை வைத்து "உஷ்" என சைகை செய்து இந்த வேடிக்கையான மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

கேஸ்ரிக் வில்லியம்ஸ் கொண்டாட்டம்

கேஸ்ரிக் வில்லியம்ஸ் கொண்டாட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் விக்கெட் எடுத்தவுடன் சில சமயம், எதிரணி பேட்ஸ்மேனை கிண்டல் செய்யும் வகையில் தன் பாக்கெட்டில் இருந்து நோட்புக் எடுப்பது போல செய்து, அதில் இந்த வீரரின் விக்கெட்டை எழுதி வைத்தது போல எடுத்துவிட்டேன் என டிக் செய்வார்.

2017 சம்பவம்

2017 சம்பவம்

2017இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடிய போது விராட் கோலி விக்கெட்டை எடுத்த வில்லியம்ஸ் இதே போல செய்து அவரை கிண்டல் செய்தார். அதை பலரும் மறந்து போய் விட்டனர்.

முதல் டி20 போட்டி

முதல் டி20 போட்டி

ஆனால், விராட் கோலி அதை மறக்கவில்லை. இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றார் வில்லியம்ஸ். முதல் போட்டியில் 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி சேஸிங் செய்து வந்தார் கோலி.

கோலி பதிலடி

கோலி பதிலடி

அப்போது வில்லியம்ஸ் வீசிய ஓவரில் அடுத்தடுத்து ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்த அவர் தன் நோட்புக்கை எடுத்து அதில் குறித்து வைத்தது போலவே சிக்ஸ் அடித்து விட்டேன் என டிக் செய்தார்.

இரண்டாவது டி20 போட்டி

இரண்டாவது டி20 போட்டி

வில்லியம்ஸ்-ஐ பழிக்கு பழி வாங்கினார் கோலி. இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் ஆடிய போது கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார் வில்லியம்ஸ்.

வில்லியம்ஸ் கேலி

இப்போது வில்லியம்ஸ் தன் உதட்டில் கை வைத்து "உஷ்" என அமைதி காப்பது போல சைகை செய்தார். இதற்கு என்ன அர்த்தம் என்பது பற்றி ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

பழிக்குப் பழி

சிலர் வில்லியம்ஸ் கோலி விக்கெட்டை வீழ்த்தி பழிக்குப் பழி வாங்கியதை கிண்டல் செய்யும் வகையில் தான் இப்படி செய்கிறார் என கூறி வருகின்றனர். சிலர் இப்போது அமைதியாக இல்லாவிட்டால் கோலி அடுத்த போட்டியில் விளாசுவார் என்பதால் இப்படி செய்தார் எனவும் கூறுகின்றனர்.

டி20 தொடர் சமன்

டி20 தொடர் சமன்

இந்த மோதலுக்கு நடுவே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் 1 - 1 என சம நிலையில் உள்ளன.

மூன்றாவது டி20 போட்டி

மூன்றாவது டி20 போட்டி

மூன்றாவது போட்டி டிசம்பர் 11ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் வெல்லும் அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போதே எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

Story first published: Monday, December 9, 2019, 19:06 [IST]
Other articles published on Dec 9, 2019
English summary
IND vs WI : Virat Kohli - Kesrick Williams sledging gone to next level after second T20.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+