தம்பி.. இந்த அடி போதுமா? வெ.இண்டீஸ் வீரரை செமயாக கேலி செய்து வெறுப்பேற்றிய கிங் கோலி!

Virat Kohli smashes Williams for six, gives animated reaction | Ind vs WI 3rd T20 Highlights

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் உடனான கோலியின் மோதல் மூன்றாவது டி20 போட்டியிலும் தொடர்ந்தது.

முதல் இரண்டு போட்டிகளில் கோலி - வில்லியம்ஸ் இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் வெறியாட்டம் ஆடிய கோலி, வில்லியம்ஸ் பந்தில் சிக்ஸ் அடித்த பின் அவரை கேலியாக பார்த்து கிண்டல் செய்தார்.

2017 சம்பவம்

2017 சம்பவம்

2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் ஒரு சர்வதேச போட்டியில் கோலி விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது நோட்புக்கை எடுத்து கோலி விக்கெட்டை வீழ்த்தி விட்டேன் என்பது போல டிக் செய்து அவரை கேலி செய்தார்.

பழிதீர்த்த கோலி

பழிதீர்த்த கோலி

இந்த நிலையில், இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் வில்லியம்ஸ் இடம் பெற்று இருந்தார். இரண்டு ஆண்டுகளாக வில்லியம்ஸ் செய்ததை மறக்காத விராட் கோலி, முதல் டி20 போட்டியில் பழி தீர்த்தார்.

சிக்ஸ் அடித்தார்

சிக்ஸ் அடித்தார்

முதல் போட்டியில் சேஸிங்கின் போது வில்லியம்ஸ் பந்துவீச்சை விளாசித் தள்ளிய கோலி, ஒருமுறை சிக்ஸ் அடித்த பின் நோட்புக்கை எடுத்து சிக்ஸ் அடித்து விட்டேன் என டிக் செய்து கேலி செய்தார்.

வில்லியம்ஸ் கிண்டல்

வில்லியம்ஸ் கிண்டல்

இரண்டாவது டி20 போட்டியில் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி பழி தீர்த்தார் வில்லியம்ஸ். அப்போது கோலி போலவே உதட்டில் கை வைத்து "உஷ்" என சைகை செய்து அவரை கிண்டல் செய்தார்.

மூன்றாவது டி20 போட்டி

மூன்றாவது டி20 போட்டி

முதல் இரண்டு போட்டிகளில் இருவரும் மாறி, மாறி கிண்டல் செய்து கொண்ட நிலையில், மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலையில் போட்டி துவங்கியது.

கோலி மரண அடி

கோலி மரண அடி

ரோஹித் சர்மா, ராகுல் அதிரடி ஆட்டம் ஆடிய நிலையில், கேப்டன் கோலி தன் மிகச் சிறந்த அதிரடி ஆட்டத்தை இந்தப் போட்டியில் ஆடிக் காட்டினார். 7 சிக்ஸ் அடித்து மிரட்டினார்.

பெரிய சிக்ஸ்

பெரிய சிக்ஸ்

இந்தப் போட்டியில் வில்லியம்ஸ் பந்தில் ஒரு பெரிய சிக்ஸ் அடித்தார் கோலி. ஏற்கனவே, வில்லியம்ஸ் பந்துவீச்சை ரோஹித், ராகுல் விளாசி தள்ளி இருந்த நிலையில், கோலி தன் பங்கிற்கு ஒரு சிக்ஸ் அடித்தார்.

சிக்ஸ் அடித்த பின்..

அந்த சிக்ஸ் அடித்த பின் மேலே பறந்து சென்ற பந்தையும், வில்லியம்ஸ்-ஐயும் மாறி மாறிப் பார்த்து கிண்டல் செய்தார் கோலி. அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

விராட் கோலி இந்தப் போட்டியில் 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். அதில் 7 சிக்ஸர்கள் அடங்கும். ரோஹித் 71, ராகுல் 91 ரன்கள் குவிக்க இந்திய அணி 240 ரன்கள் குவித்தது.

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியா 2 - 1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI : Virat Kohli laughed at Kesrick Williams after hitting a huge six
Story first published: Thursday, December 12, 2019, 14:41 [IST]
Other articles published on Dec 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X