Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: உலகிலேயே எந்த டீமும் செய்யாத ஓபனிங் ரெக்கார்டு.. வெஸ்ட் இண்டீஸ் செய்த படுமோசமான சாதனை

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான அகமதாபாத் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி படுமோசமாக பேட்டிங் செய்த நிலையில், அந்த அணியின் தொடக்க வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஒரு காலண்டர் ஆண்டில், குறைந்தது 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அணிகளில், மிகக் குறைந்த பேட்டிங் சராசரியைக் கொண்ட தொடக்க வீரர்கள் என்ற அவமானகரமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் (2025) படைத்துள்ளது. அவர்களின் சராசரி வெறும் 10.20 ஆகும்.

இதற்கு முன்பு, 1912-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க தொடக்க வீரர்களின் சராசரி 11.45 ஆக இருந்தது. சுமார் 113 வருடங்கள் பழமையான அந்த மோசமான சாதனையை, தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி முறியடித்துள்ளது.

IND vs WI West Indies Shatters 113-Year-Old worst opening batting Record A Shameful in Test Cricket in a Calendar Year

ஒரு காலண்டர் ஆண்டில் தொடக்க வீரர்களின் மோசமான சராசரி (குறைந்தது 5 டெஸ்ட்கள்):

  • 10.20 - வெஸ்ட் இண்டீஸ் (2025)
  • 11.45 - தென்னாப்பிரிக்கா (1912)
  • 11.95 - பாகிஸ்தான் (1986)
  • 13.54 - ஜிம்பாப்வே (1999)
  • 14.10 - இங்கிலாந்து (1906)
  • 14.85 - நியூசிலாந்து (1958)

வெஸ்ட் இண்டீஸின் சரிவு

இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முகமது சிராஜ் (4 விக்கெட்டுகள்) மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் (3 விக்கெட்டுகள்) வேகத்தில் வெறும் 162 ரன்களுக்குச் சுருண்டது. இதில் தொடக்க வீரர்களான ஜான் கேம்ப்பெல் 8 ரன்களிலும், டேகனரைன் சந்தர்பால் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் கே.எல். ராகுல் (100), துருவ் ஜுரல் (125), மற்றும் ரவீந்திர ஜடேஜா (104*) ஆகியோர் அடித்த சதங்களின் உதவியுடன், இந்தியா இமாலய ஸ்கோரை எட்டியது.

இதையடுத்து, 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அங்கேயும் படுமோசமாகத் தடுமாறியது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தில் அந்த அணி நிலைகுலைந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடக்க வீரர்கள் சோபிக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேகநரைன் சந்தர்பால் 8 ரன்களில் சிராஜ் பந்துவீச்சிலும், ஜான் கேம்ப்பெல் 14 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுத்துத் திணறியது.

Story first published: Saturday, October 4, 2025, 11:37 [IST]
Other articles published on Oct 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+