For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final: 5வது நாள் ஆட்ட நேர முடிவில் 64/2.. இந்தியா முன்னிலை - "ரிசர்வ் டே"க்கு வேலை வந்தாச்சு

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி ஐந்தாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் நேற்று (ஜூன்.22) நடைபெற்றது.

இதில் எதிர்பார்த்ததை விட, இந்திய அணியின் பவுலிங் அபாரமாக இருந்தது. விரைவாகவே நியூசிலாந்து அணியை ஆல் அவுட் செய்து அசத்தியது.

 217 ரன்கள்

217 ரன்கள்

முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

 அட்டாக் பவுலிங்

அட்டாக் பவுலிங்

இந்நிலையில், கடந்த (ஜூன் 21) நான்காவது நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஜூன்.22) ஐந்தாவது நாள் ஆட்டம் ஒருமணி நேரம் தாமதமாக தொடங்கியது. ஆனால், இதில் இந்திய பவுலர்கள் மிகச் சிறப்பாக வீசி வீசினர். இஷாந்த் அதிக ஸ்விங் பந்துகளை வீச, ஷமி ஸ்விங் மற்றும் வேகம் என இரண்டிலும் நியூசிலாந்து வீரர்களை அட்டாக் செய்தார்.

 வெரைட்டி பவுலிங்

வெரைட்டி பவுலிங்

இதில், ஷமியின் பவுலிங் அற்புதமாக அமைந்தது. அவர் வீசிய முதல் ஓவரிலேயே லைன் அண்ட் லெந்தில் அதகளம் புரிந்தார். முதல் ஓவரில் பந்துகள் அட்டகாசமாக அவுட் ஸ்விங் ஆகின. அந்த லைன் அண்ட் லெந்தை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஷமி டெய்லரை 11 ரன்னில் காலி செய்து, வாட்லிங்கை வெறும் 1 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார்.

 நியூசி முன்னிலை

நியூசி முன்னிலை

அதேபோல், ஹென்றி நோகோல்ஸை 7 ரன்களில் இஷாந்த் எட்ஜ் ஆக வைத்து அவுட்டாக்கினார். பிறகு லோ ஆர்டரில் ஜேமிசன் 21 ரன்களும், சவுதி 30 ரன்களும் எடுக்க, நியூசிலாந்து 99.2வது ஓவரில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கான்வே அதிகபட்சமாக 54 ரன்களும், வில்லியம்சன் 49 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி 4, இஷாந்த் 3, அஷ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம், இந்தியாவை விட அந்த அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.

 2 விக்கெட்

2 விக்கெட்

இதைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ஷுப்மன் கில் 8 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையும் டிம் சவுதி அபாரமாக எல்பி செய்தார். 5வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று (ஜூன்.23) மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்றும் போட்டி நடைபெற உள்ளது.

Story first published: Wednesday, June 23, 2021, 14:04 [IST]
Other articles published on Jun 23, 2021
English summary
india 64 for 2 wickets end of wtc final day 5 - இந்திய அணி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+