Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவுக்கு மாற்றாக வரும் இளம் வீரர்.. யார் இந்த அபிமன்யூ ஈஸ்வரன்? வாய்ப்பு கிடைக்குமா?

மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

ஏற்கனவே ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றியுள்ள நிலையில், டிசம்பர் 14ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இதனிடையே இந்திய கேப்டன் ரோகித் சர்மா காயம் அடைந்துள்ளது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரோகித் சர்மா காயம்

ரோகித் சர்மா காயம்

வங்கதேச அணிக்கு எதிரன 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் கேப்டன் ரோகித் சர்மா ஃபில்டிங் செய்யும் போது விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் விளையாடவில்லை. இறுதியாக பேட்டிங் செய்ய களமிறங்கிய அவர், வெற்றிக்காக கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரோகித் சர்மா சந்தேகம்

ரோகித் சர்மா சந்தேகம்

இதனைத் தொடர்ந்து 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ரோகித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு?

அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு?

இதனால் ரோகித் சர்மா காயத்தின் தன்மையை அறிந்து பிசிசிஐ மாற்று வீரர்களை தயார்படுத்தியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக இந்தியா ஏ அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே வங்கதேச ஏ அணிக்கு எதிராக சதம் விளாசி இருந்தார். அதேபோல் ரோகித் சர்மா காயத்தால் விலகினால், கேஎல் ராகுல் - சுப்மன் கில் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உம்ரான் மாலிக்

உம்ரான் மாலிக்

அதேபோல் காயம் காரணமாக வங்கதேச தொடரில் இருந்து விலகியுள்ள மூத்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் அல்லது முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டால், டி20, ஒருநாள் கிரிக்கெட்டை தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, December 8, 2022, 14:09 [IST]
Other articles published on Dec 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+