Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அறிமுக போட்டியில் சதம்… இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழப்பு..

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.

இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள், 2 வேகப்பந்துவீச்சாளர்கள் , 5 பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர் என்ற கணக்கில் அணியை தேர்வு செய்து இருந்தனர்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே சுப்மான் கில், மாயங் அகர்வால் ஜோடி நிதானமாக விளையாடியது.

சுப்மான் கில்

சுப்மான் கில்

மாயங்க அகர்வால் 13 ரன்களில் ஆட்டமிழக்க, இதன் பின்னர் ஜோடி சேர்ந்த புஜாரா, சுப்மான் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. சுப்மான் கில் 52 ரன்களில் ஜேமிசன் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதன் பின் ஜோடி சேர்ந்த இந்தியாவின் அனுபவ வீரர்களான புஜாரா, ரஹானே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை மட்டை போட்டு வெறுப்பேற்றினர். வழக்கம் போல் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய புஜாரா 88 பந்தில் 26 ரன்கள் எடுத்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். சற்று அதிரடியாக விளையாடிய ரஹானே 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் ஸ்டம்புகள் சிதற, பெவிலியன் திரும்பினார்

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

இந்திய அணி 145 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, இந்திய அணியை கரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அறிமுக வீரராக இருந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயர் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். ஜடேஜா தனது 17வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

சதம்

சதம்

இந்திய அணி 258 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி 2வது நாள் ஆட்டத்தை தொடங்கியது. ஜடேஜா 50 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக போட்டியில் சதம் விளாசினார். இருப்பினும் அவர் 103 ரன்களுக்கு சவுதி பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். விதர்மான் சாஹா மீண்டும் சொதப்ப, தமிழக வீரர் அஸ்வின் மட்டும் தன் பங்கிற்கு 38 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து தரப்பில் சவுதி 5 விக்கெட்டுகளையும், ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 2வது நாள் தொடக்கத்தில் நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு, இந்தியாவை 350 ரன்களக்குள் சுருட்டியுள்ளது.தற்போது நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.

Story first published: Friday, November 26, 2021, 15:37 [IST]
Other articles published on Nov 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+