Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 2 ஒரு நாள் போட்டிகள், டி20 போட்டிக்கான இந்திய அணி இதோ!

டெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி இரு ஒரு நாள் போட்டிகள் மற்றும் டுவென்டி 20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 15 பேர் கொண்ட அணியை இந்தியத் தேர்வாளர் குழு அறிவித்துள்ளது. இதில், சுழற்பந்து வீச்சாளர்களில் மாற்றம் செய்துள்ளனர். அதன்படி அக்ஷர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர். அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி முதல் 3 போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்ட அணியில் வேறு மாற்றம் இல்லை.

டிவிட்டர் மூலம் அணித் தேர்வை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் ஆளுக்கு ஒரு போட்டியில் வென்றுள்ளன. 3வது போட்டி ஹூட் ஹூட் புயல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. அந்தப் போட்டி புயல் தாக்கிய விசாகப்பட்டனத்தில் நடைபெறுவதாக இருந்தது.

டி-20 போட்டி

இதுதவிர அக்டோபர் 22ம் தேதி கட்டாக்கின் பாரபாதி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஒரே ஒரு டி20 போட்டிக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மணீஷ் சர்மா, அக்ஷர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல சஞ்சு சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி, கரன் சர்மா ஆகியோருக்கும் இடம் தரப்பட்டுள்ளது.

டுவென்டி 20 போட்டிக்கான அணி: டோணி, ஷிகர் தவன், அஜிங்கியா ரஹானே, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ஸ்டூவர்ட் பின்னி, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், கரண் சர்மா, புவனேஷ் குமார், முகம்மது ஷமி, சஞ்சு சாம்சன், மணீஷ் சர்மா, உமேஷ் யாதவ்.

Story first published: Tuesday, October 14, 2014, 15:43 [IST]
Other articles published on Oct 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+