Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி.. திடீரென்று கேப்டனாக மாறிய ஹர்திக் பாண்டியா.. ஹிட்மேன் எங்கடா?

சென்னை : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா களத்தில் சிறிது நேரம் இல்லாதது ரசிகர்களுடைய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இது ஆஸ்திரேலியன் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய மிச்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார்.

India australia world cup match - Hardik pandya took charge as captain in rohit absence

தொடக்க வீரர் டேவிட் வார்னர் 41 ரன்கள் , ஸ்மித் 46 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில் சென்னையில் வெயில் இன்று கொளுத்தி எடுத்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக தடுமாறினர். இதைப் போன்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் திடீரென்று களத்தை விட்டு வெளியேறினார். இதன் பிறகு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பெடுத்துக் கொண்டு ஓவர்களை வீரர்களுக்கு மாற்றி வழங்கினார்.

இன்னும் சொல்லப்போனால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்ற பிறகுதான் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஹர்திக் பாண்டியா தொடர்ந்து சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து அட்டாக் செய்ய ஆரம்பித்தார். இதற்கு பலனாக விக்கெட்டுகளும் அடுத்தடுத்து கிடைத்தது. ஹர்திக் பாண்டியா தான்தோன்றித்தனமாக இயங்காமல் கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரிடமும் ஆலோசனைகளை கேட்டுக்கொண்டு பீல்டர்களை மாற்றி நிறுத்தினார்.

இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து தான் ரோகித் சர்மா களத்துக்கு வந்தார். ரோகித் சர்மா ஏன் களத்தை விட்டு சென்றார் என்பது குறித்து என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் வெயிலின் தாக்கத்தால் ரோகித் சர்மா சிறிது நேரம் ஓய்வு எடுத்து எடுத்துக்கொள்ள சென்றிருக்கலாம் என தெரிகிறது. சென்னை வெயில் எப்படிப்பட்ட வீரராக இருந்தாலும் அவருடைய உடல் தகுதியை சோதிக்கும் என்பதை ரோகித் சர்மாவை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

Story first published: Sunday, October 8, 2023, 17:45 [IST]
Other articles published on Oct 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+