Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்தியா..எம்ஜிஆர் போல் அடிவாங்கி பிறகு வென்ற கோலி,ராகுல்

சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணி உலக கோப்பை போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

India beat australia by 6 wickets in ICC World cup 2023

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களம் இறங்க மிச்செல் மார்ஸ் டக்அவுட் ஆக டேவிட் வார்னர் 41 ரன்கள், ஸ்மித் 46 ரன்களும் மார்னஸ் லாபஸ்சேன் 27 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 199 ரன்கள் அனைத்து விக்கெட் களையும் இழந்தது. இந்திய பவுலர்கள் தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷன் கோல்டன் டக்காக கேப்டன் ரோஹித் சர்மாவும் டக் அவுட் ஆனார். இதனை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் டக்காக இந்திய அணி இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி, கே.எல். ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தது.

India beat australia by 6 wickets in ICC World cup 2023

இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாட விராட் கோலி 75 பந்துகளில் அரை சதம் கடக்க கேஎல் ராகுல் 72 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 85 ரன்களில் வெளியேற ஹர்திக் பாண்டியா கேஎல் ராகுல் ஜோடி கடைசி வரை நின்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

கடைசியாக ராகுல் சிக்சர் அடித்து 97 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் நின்றார். இதன் மூலம் 9 ஓவர்கள் எஞ்சிய நிலையில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் ஹேசேல் வுட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் உலகக்கோப்பை ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி தற்போது வெற்றியுடன் தொடரை தொடங்கி இருக்கிறது.

Story first published: Sunday, October 8, 2023, 22:05 [IST]
Other articles published on Oct 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+