Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டனாக தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் வெற்றி.. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்.. முழு விவரம்

டெர்பி: இங்கிலாந்து கவுண்டி அணியான டெர்பிஷிருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்திய அணி விளையாடியது.

வரும் 7ஆம் தேதி தொடங்க உள்ள டி20 போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய அணி விளையாடியது. இதுவரை வாய்ப்பு பெறாத வீரர்களுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு தரப்பட்டது.

தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர், ஆர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னாய், சஞ்சு சாம்சன் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற, ஹர்திக், இஷான் கிஷன் ஆகியோர் ஓய்வில் இருந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

இதில் டாஸ் வென்ற கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து டெர்பிஷிர் அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர் மசூத், லுயிஸ் ரீஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். வெயின் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். நடுவரிசையில் இருந்த வீரர்கள், தங்களது இ,ன்னிங்சை நன்றாக தொடங்கினாலும், அதனை பெரிய இலக்காக மாற்றாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.

இந்திய பந்துவீச்சு

இந்திய பந்துவீச்சு

இதனால் இருபது ஓவர் முடிவில் டெர்பிஷிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 31 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் 3 ஓவர்களை வீசி 18 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

ருத்துராஜ் ஏமாற்றம்

ருத்துராஜ் ஏமாற்றம்

இதனையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ருத்துராஜ் 3 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார். இதனையடுத்து மீண்டும் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சஞ்சு சாம்சன் 30 பந்துகளில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தீபக் ஹூடா அரைசதம்

தீபக் ஹூடா அரைசதம்

சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 37 பந்துகளில் 59 ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.நட்சத்திர வீரர் சூர்யகுமார் தன் பங்கிற்கு 22 பந்துகளில் 36 ரன்கள் விளாச, கேப்டன் தினேஷ் கார்த்திக் 7 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 16.4வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. 2வது பயிற்சி ஆட்டம் நாளை இரவு நடைபெறுகிறது.

Story first published: Saturday, July 2, 2022, 12:34 [IST]
Other articles published on Jul 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+