Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு பதிலடி தந்த இந்தியா.. கேப்டனாக ரோகித் புதிய சாதனை.. தொடர்ந்து 4 தொடரில் வெற்றிகொடி

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து அணி டி20 போட்டியில் முதல் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2க்கு0 என்ற கணக்கில் வென்றத. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கோலி, ஜடேஜா, ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

அதிரடி பவர்பிளே

அதிரடி பவர்பிளே

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக விளையாடிய ரிஷப் பண்ட். 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 4 பவுண்டரி மற்றும் 1 இமாலய சிக்சரை விளாசி 26 ரன்கள் சேர்த்தார். ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 20 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். இதில் மூன்று பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.இதன் மூலம் பவர்பிளேவில் இந்திய அணி 61 ரன்களை குவித்தது.

இந்தியா 170 ரன்கள்

இந்தியா 170 ரன்கள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோல 1 ரன்னில் வெளியேறினார். ம். சூர்யகுமார் , ஹர்திக் பாண்டியா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அணி 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தினேஷ் கார்த்திக் 17 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்து, முக்கிய கட்டத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஹர்சல் பட்டேல் 6 பந்துகளில் 13 ரன்கள் விளாசினார். இறுதியில் ஜடேஜா,. 29 பந்துகளில் 46 ரன்கள் விளாச இந்திய அணி 170 ரன்கள் எடுத்தது.

தடுமாறிய இங்கிலாந்து

தடுமாறிய இங்கிலாந்து

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜேசன் ராய் முதல் பந்திலேயே அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஜாஸ் பட்லர் 4 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து அதிரடியாக ரன் குவித்த லிவிங்ஸ்டோன் 15 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் கிளின் போல்ட் ஆனார். டேவிட் மாலன் 19 ரன்களிலும், ஹாரி புருக் 8 ரன்களிலும் , சாம் கரண் 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ரோகித் சாதனை

ரோகித் சாதனை

இதனையடுத்து தனி ஆளாக நின்று போராடிய மொயின் அலி 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். டேவிட் வில்லி இறுதியில் 33 ரன்கள் சேர்கக மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்த அணி 17 வது ஓவரில் 121 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 4 முறை டி20 தொடரை இந்தியா வென்று அசத்தியது. ரோகித் சர்மா கேப்டன் பதவியை ஏற்று தொடர்ந்து 19 போட்டியில் வென்று சாதனை படைத்தார். 3 விக்கெட் வீழ்த்திய புவனேஸ்வர் குமார் 3 ஆட்டநாயகன் விருதை வென்றார்

Story first published: Saturday, July 9, 2022, 22:49 [IST]
Other articles published on Jul 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+