Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாவு பயத்தை காண்பித்த அயர்லாந்து.. கடைசி ஓவரில் உம்ரான் மாலிக் அசத்தல்.. இந்தியா த்ரில் வெற்றி

டுபுளின்: அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

Recommended Video

IRE vs IND 2வது T20 பேட்டியில் போராடி India அணி வெற்றி | *Cricket

225 ரன்கள் விளாசியும், இந்திய அணி தோல்வியின் அருகே செல்ல, கடைசி நேரத்தில் இந்திய பவுலர்கள் காப்பாற்றினர்.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றம் செய்யப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

2வது விக்கெட் அதிரடி

2வது விக்கெட் அதிரடி

அதிரடியாக ஆட முற்பட்ட இஷான் கிஷன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாம்சன், தீபக் ஹூடா ஆகியோர் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீபக் ஹூடா 27 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதில் 4 சிக்சரும், 3 பவுண்டரிகள் அடங்கும். மறுபுறம் சஞ்சு சாம்சன் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சஞ்சு சாம்சன் அரைசதத்தை 31 பந்துகளில் பூர்த்தி செய்தார்.

தீபக் ஹூடா சதம்

தீபக் ஹூடா சதம்

தீபக் ஹூடா மறுபக்கம் சிக்சர், சிக்ராக விளாச 55 பந்துகளில் தனது முதல் சதத்தை பர்த்தி செய்தார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் தனது பேட்டிங்கில் பட்டையை கிளப்பி 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்கள் பெரிய ஷாட் ஆட முயன்று அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களை எடுத்தது.

பதிலடி தந்த அயர்லாந்து

பதிலடி தந்த அயர்லாந்து

இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டர்லிங், பால்பிரின் ஆகியோர் சிக்சர்களை பறக்கவிட்டனர். இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி தரப்பட்டது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 5.4 ஓவரில் 72 ரன்கள் சேர்த்தது. பால் ஸ்டிர்லிங் 18 பந்துகளில் 40 ரன்கள் குவிக்க, கேப்டன் பால்பிரின் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். டெலானி ரன் எடுக்காத நிலையில் டக் அவுட்டாகினார்.

இந்தியா த்ரில் வெற்றி

இந்தியா த்ரில் வெற்றி

லார்கன் டக்கர் 5 ரன்களில் ரன் அவுட்டாக, ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது. அப்போது களத்துக்கு வந்த ஹாரி டக்கர் 5 பவுண்டரிகளை விளாசி 28 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட, உம்ரான் மாலிக் தனது அசுர வேகத்தில் வீசினார். இதில் 2வது பந்து நோ பாலாக, அடுத்து 2 பவுண்டரிகள் அடிக்கப்பட்டது. இதனையடுத்து 3 பந்துக்கு 8 ரன்கள் தேவைப்பட உம்ரான் மாலிக் 3 சிங்கிள்ஸ் மட்டுமே விட்டு கொடுக்க இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, தொடரையும் 2க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Story first published: Wednesday, June 29, 2022, 0:56 [IST]
Other articles published on Jun 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+