வெஸ்ட் இண்டீஸை சுளுக்கு எடுத்த இந்தியா..!! WHITEWASH செய்த ரோகித் படை..!!
அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடரை முழுமையாக வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரிஷப் அரைசதம்
அல்சாரி ஜோசப் வீசிய அதே ஓவரல் முன்னாள் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாக இந்தியாவுக்கு ஆரம்பே அதிர்ச்சியாக அமைந்தது. ஷிகர் தவான் 10 ரன்களில் வெளியேற, இந்திய அணி 42 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி 54 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர்
மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களில் நடையை கட்டினார். அவரது இன்னிங்சில் 9 பவுண்டரிகள் அடங்கும். ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து இந்தியா மீண்டும் தடுமாறியது.இறுதியில் தீபக் சாஹர், வாசிங்டன் சுந்தர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.தீபக் சாஹர் 38 ரன்களும், வாசிங்டன்சுந்தர் 33 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 265 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தடுமாற்றம்
266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய
தீவுகள் அணி களமிறங்கியது. வழக்கம் போல் அந்த அணியின் தொடக்க வீரர்கள் சாய் ஹேர்ப் 5 ரன்களிலும்,பிரண்டன் கிங் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டேரன் பிராவோ 19 ரன்களில் வெளியேற, புருக்ஸ் டக் இவுட்டாகி, வெஸ்ட் இண்டீஸ் அணி 68 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது

ஒயிட்வாஷ்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹோல்டர் 6 ரன்களிலும், ஃபெபியன் ஆலன் டக் அவுட்டாகியும் பெவிலியன் திரும்பினர். கேப்டன் நிக்கோலஸ் பூரான் 34 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஓடியன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 169 ரன்களில் சுருண்டது.


Click it and Unblock the Notifications