Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் அசத்தல் பந்து வீச்சு.. 2வது டெஸ்டில் 196 ரன்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் !

கிங்ஸ்டன்: இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்களில் சுருண்டது. அபாரமாக பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கோஹ்லி தலைமையிலான, இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் நாட்டில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1 - 0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

India bowl out West Indies for 196 in Kingston

ஆன்டிகுவா டெஸ்டில் இடம் பிடித்திருந்த முரளி விஜய்க்கு காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கார்லோஸ் பிராத்வைட் நீக்கப்பட்டு புதுமுக வீரர் மிகுயேல் கம்மின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்விறு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு கிங்ஸ்டனில் தொடங்கியது. டாசில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டல் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பிராத் வைட், சந்திரிகா ஜோடி துவக்கம் தந்தனர். இஷாந்த் சர்மா வீசிய 2வது ஓவரின் 4வது பந்தில் பிராத் வைட்(1) நடையை கட்டினார். 5வது பந்தில் பிராவே டக்அவுட் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 196 ரன்கள் மட்டும் எடுத்தது.

அபாரமாக பந்து வீசிய இசாந்த் சர்மா 3 ஒவர்களில் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஷமி 2 ஓவர்களில் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து சுழலில் மிரட்டிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Monday, August 1, 2016, 10:39 [IST]
Other articles published on Aug 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+