Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை டெஸ்ட்: 182-ல் சுருண்ட மே.இ. தீவுகள்! இந்தியா- 157/2 - அரை சதம் நோக்கி சச்சின்!!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீர சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 182 ரன்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி. இதையடுத்து ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்திருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்னில் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி, பீல்டிங்கை தேர்வு செய்தார்.

தடுமாறிய மே.இந்திய தீவுகள்

தடுமாறிய மே.இந்திய தீவுகள்

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. விக்கெட்டுகள் மளமளென விழ 182 ரன்களிலேயே சுருண்டது.

அஸ்வின் 100வது விக்கெட்

அஸ்வின் 100வது விக்கெட்

இந்திய அணியின் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவரது 100வது விக்கெட்டும் அடங்கும்.

ஓஜா அசத்தல்

ஓஜா அசத்தல்

இந்திய பந்துவீச்சாளர் ஓஜா அசத்தலாக பந்து வீசினார். அவர் 40 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை மிரள வைத்தார்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இதன் பின்னர் இந்தியா களமிறங்கியது. இந்திய வீரர்கள் விறுவிறுவென ரன்களைக் குவித்தனர். 77 ரன்கள் எடுத்த நிலையில் தவான் 33 ரன்களிலும் முரளி விஜய் 43 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அப்போது களத்தில் புஜரா இருந்தார்.

ஆராவரத்துடன் களமிறங்கிய நாயகன்

ஆராவரத்துடன் களமிறங்கிய நாயகன்

இதைத் தொடர்ந்து புஜராவுடன் இணைய சச்சின் டெண்டுல்கர் ஆடுகளத்துக்கு வந்தார். அப்போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆராவாரமாக கைதட்டி டெண்டுல்கரை வரவேற்றனர்.

பவுண்டரிகளை விளாசிய டெண்டுல்கர்

பவுண்டரிகளை விளாசிய டெண்டுல்கர்

டெண்டுல்கர் எப்படியும் சதமடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் பவுண்டரிகளை விளாசினார்.

அரை சதம் நோக்கி டெண்டுல்கர்

அரை சதம் நோக்கி டெண்டுல்கர்

இன்றைய ஆட்ட நேர முடிவில் டெண்டுல்கர் 38 ரன்களுடனும் புஜாரா 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

157 ரன்கள்

157 ரன்கள்

இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்துள்ளது.

ஓய்வு பெறும் டெண்டுல்கர்

ஓய்வு பெறும் டெண்டுல்கர்

இந்த டெஸ்ட் போட்டியுடன் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற உள்ளார்.

200வது டெஸ்ட்

200வது டெஸ்ட்

கொல்கத்தா மைதானத்தில் 199-வது டெஸ்டை விளையாடிய டெண்டுல்கருக்கு மும்பை மைதானத்தில் 200-வது டெஸ்டாகும்.

முதல் வீரர்

முதல் வீரர்

200-வது டெஸ்டில் விளையாடும் உலகின் முதல் வீரர் என்ற பெருமையை டெண்டுல்கர் பெறுகிறார்.

சதமடிப்பாரா?

சதமடிப்பாரா?

கடைசி டெஸ்டில் டெண்டுல்கர் சதம் அடித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

Story first published: Thursday, November 14, 2013, 17:28 [IST]
Other articles published on Nov 14, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+