For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெஸ்ட் இண்டீசை காலி செய்த இந்தியா..!! ஆனா கன்னத்தில் கை வைத்த பாக். காரணம் அது தான்..?

கயானா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனையை படைத்திருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்திய அணி. முதல் 2 போட்டிகளை விட இந்த போட்டியை ரசிகர்கள் முக்கியமாக எதிர்பார்த்தனர்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்று இந்திய அணி தொடரை ஏற்கனவே வென்றுவிட்டது. 3வது போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங்

முதலில் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 146 ரன்கள் அடித்தது. தீபக் சாஹர், முதல் இரண்டு ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார்.

பொறுப்பான பொல்லார்டு

பொறுப்பான பொல்லார்டு

பின்னர் பொல்லார்டு பொறுப்புடன் ஆடி வெஸ்ட் இண்டீசின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. 147 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது.

ஒயிட் வாஷ்

ஒயிட் வாஷ்

3வது போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸை 3க்கு 0 என ஒயிட் வாஷ் செய்து இந்திய அணி தொடரை வென்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டி 20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற புதிய மைல்கல்லை இந்தியா எட்டியிருக்கிறது.

சொந்த மண்ணில் வெற்றி

சொந்த மண்ணில் வெற்றி

கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அப்போது, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்தியா 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வென்றது. தற்போதும் அதே போன்று 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை சாய்த்திருக்கிறது.

புதிய சாதனை

புதிய சாதனை

அதாவது, தொடர்ச்சியாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 6 டி 20 போட்டிகளில் இந்திய அணி வென்று சாதனை படைத்திருக்கிறது. முன்னதாக வெஸ்ட் இண்டீசை தொடர்ச்சியாக 5 முறை வீழ்த்திய அணியாக பாகிஸ்தான் இருந்தது. இப்போது அந்த சாதனையை முறியடித்திருக்கிறது இந்திய அணி.

Story first published: Wednesday, August 7, 2019, 13:38 [IST]
Other articles published on Aug 7, 2019
English summary
India breaks Pakistan team t 20 records against West Indies series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+