Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் அணியில் விடைபெறும் ஜாம்பவான்?.. பிசிசிஐ வெளியிட்ட தகவல்.. அடுத்த கேப்டன் யார்? கில், பண்ட்?

மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஜாம்பவான் வீரர் ஒருவர் தாமாக விலக உள்ளதாக பிசிசிஐ-யில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஓய்வை அறிவிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2025 ஐபிஎல் தொடர் முடிந்தவுடன், இந்திய அணி ஜூன் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்தத் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யார் இருப்பார்? என்ற கேள்வி சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில், கடைசியாக இந்திய அணி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில் கேப்டன் ரோஹித் சர்மா கடைசி போட்டியில் இருந்து தாமாகவே விலகி இருந்தார்.

India Captain for England Test Series 2025 Rohit Sharma Likely to Step Down

அவரது பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்ததால் அவர் தாமாகவே கடைசி போட்டியில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்திருந்தார். அதனால், ரோஹித் சர்மா இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டாரா? என்ற கேள்வி இருந்தது. சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வந்த செய்தியில், ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்படுவார் எனக் கூறப்பட்டிருந்தது. இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது.

அவரது டெஸ்ட் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருப்பதால் அவர் எவ்வாறு இந்திய டெஸ்ட் அணியில் நீடிப்பார்? என்ற கேள்வி இருந்தது. தற்போது பிசிசிஐ வட்டாரத்திலிருந்து மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா தாமாகவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலக உள்ளதாகக் கூறப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அவர் இனி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவிக்கப் போகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், இங்கிலாந்து அணியுடன் மோதும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி 2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் போது தேர்வு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகினால் யார் கேப்டனாக செயல்படுவார்கள்? என்ற கேள்வி உள்ளது.

மற்றொரு மூத்த வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்தாலும், அவர் நிச்சயமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார். ஆனால் அவரும் கேப்டன் பதவியை பெற மாட்டார் என தெரிகிறது.

பும்ரா தற்போது காயத்தில் சிக்கியிருக்கிறார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடுவாரா? என்ற சந்தேகமும் உள்ளது. எனவே, சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக அதிக வாய்ப்பு உள்ளது.

Take a Poll

செய்தி சுருக்கம்:

  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
  • ரோஹித் சர்மா தனது மோசமான ஃபார்ம் காரணமாக கடைசி ஆஸ்திரேலிய டெஸ்டில் விளையாடவில்லை.
  • அவர் இங்கிலாந்து தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்று முன்பு கூறப்பட்டது.
  • தற்போது அவர் இங்கிலாந்து தொடரில் இருந்து விலக உள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • விராட் கோலி அணியில் இருப்பார், ஆனால் கேப்டனாக வாய்ப்பில்லை. பும்ரா காயம் காரணமாக விளையாடுவது சந்தேகமே.
  • சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
  • ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் போது இந்திய டெஸ்ட் அணி தேர்வு செய்யப்பட உள்ளது.
Story first published: Friday, March 28, 2025, 8:50 [IST]
Other articles published on Mar 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+