Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்ஸ்தீப் சிங் செய்தது குற்றம்.. அடிப்படையை முதலில் கற்று கொள்ளுங்க..தோல்வி குறித்து ஹர்திக் விளாசல்

புனே : இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய ஆடுகளத்தில் ஹர்திக் பாண்டியா வித்தியாசமாக செயல்படுகிறேன் என்று கூறி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதற்கு இலங்கை வீரர்கள் கடும் தண்டனை கொடுத்தனர். 20 ஓவர் முடிவில் இலங்கை 206 ரன்களை விளாசி அசத்தியது. இதேபோன்று இந்திய அணி பேட்டிங் செய்யும்போது பந்து நன்றாக ஸ்விங் ஆனது.

இதனால் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். குறிப்பாக 57 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.

காயப்படுத்தியது

காயப்படுத்தியது

எனினும் அக்சர் பட்டேல், சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியில் இந்திய அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் ஆர்ஸ்தீப் சிங் 5 நோ பால்களை வீசியது தோல்விக்கு காரணமாக கருதப்பட்டது. இது குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் பல தவறுகள் செய்திருக்கிறோம். குறிப்பாக பவர் பிளேவில் நாங்கள் விளையாடிய விதம் எங்களை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது.

 குற்றம்

குற்றம்

நாங்கள் பல அடிப்படையான தவறுகளை செய்து விட்டோம். ஒரு வீரருக்கு நல்ல தினம், கெட்ட தினம் வரலாம் . ஆனால் நம் எது அடிப்படையோ அதனை நாம் சரியாக செய்ய வேண்டும். அடிப்படையில் தவறு செய்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. நோபல் வீசுவது டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை குற்றம். ஆர்ஸ்தீப் சிங் அதனை திருத்திக் கொள்வார் என நம்புகிறேன். இதற்காக ஆர்ஸ்தீப் சிங்கை நான் கடுமையாக விமர்சிக்க விரும்பவில்லை.

அடிப்படையில் கவனம்

அடிப்படையில் கவனம்

முதலில் அடிப்படை விஷயத்தை கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் நமக்கு வெற்றியை பெற்று தரும். நோபால் வீசியது எங்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர் ஏற்கனவே இது போன்ற நிறைய நோ பால்களை வீசி இருக்கிறார். எனினும் இதனை ஒரு பாடமாக கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்போம். சூரியகுமார் யாதவ் கடந்த ஆண்டு நான்காவது பேட்டிங் வரிசையில் தான் இறங்கினார்.

 பேட்டிங் வரிசை மாற்றம்

பேட்டிங் வரிசை மாற்றம்

அதனால் இம்முறை அவருக்கு நடுவரிசையில் வாய்ப்பு வழங்கினோம். ராகுல் திரிபாதி தொடக்க வீரர் என்பதால் அவர் மூன்றாவது வரிசையில் பேட்டிங் இறங்கினால் அது அவருக்கு சரியாக இருக்கும் என நினைத்தோம். சூரியகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் விளையாடிய விதம் நிச்சயம் எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. எனினும் நாங்கள் முன் வரிசையில் கொஞ்சம் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி இருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்போம் என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.

Story first published: Thursday, January 5, 2023, 23:33 [IST]
Other articles published on Jan 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+