மும்பை : ஆசிய கோப்பையில் இந்திய அணி வென்ற பிறகு தற்போது உலக கோப்பை தொடர்க்கும் முன்பாக ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் முடிந்தவுடன் நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராகி விடும்.
இதனால் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் ஆகியோருக்கு முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.

இதனால் தமிழக வீரர் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அக்சர் பட்டேல் காயம் காரணமாக ஒரு வாரம் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அந்த இடத்திற்கு அஸ்வின் வருவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர் 21 மாதங்களுக்கு பிறகு அஸ்வின் ஒருநாள் கிரிக்கெட்டில் திரும்பி உள்ளார். அவர் ஒரு நாள் ஆரணிக்கு சரி வருவாரா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா அஸ்வின் ஒரு மிகச்சிறந்த வீரர் என்றும் அவர் 150 ஒரு நாள் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். அஸ்வின் உடைய அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்று குறிப்பிட்ட ரோகித் சர்மா, எனினும் இது முன்னால் நடந்தது தற்போது உள்ள சூழலுக்கு தொடர்பு கிடையாது என்பதை ஒப்புக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் அஸ்வின் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் விளையாடுவதால் அவர் ஒரு நாள் போட்டிக்கு தயாராக தான் இருப்பார் என்று கூறினார் .
மேலும் அஸ்வினின் கிரிக்கெட் அறிவு நிச்சயம் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தரும் என்று தாம் நம்புவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர், ஆசிய கோப்பை தொடரில் அஸ்வின் இடம்பெறுவாரா இல்லையா என்பது குறித்து தற்போதைய அறிவிக்க தேவையில்லை என்றும் அக்சர் பட்டேல் முழு உடல் தகுதியை எட்டு வரை என்பதை முதலில் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனால் அஸ்வின் உலகக்கோப்பை அணியில் இருப்பாரா இல்லையா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.