Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி - ரிஸ்க் எடுத்த ரோகித் சர்மா..பிளேயிங் லெவனில் 2 பெரிய மாற்றம்

திருவனந்தபுரம் : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சற்று நேரத்திற்கு முன்பு திருவனந்தபுரத்தில் தொடங்கியது.

இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்ற நிலையில், 3 க்கு 0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வெல்லும் வாய்ப்பு ரோகித் சர்மா படைக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரம் ஆடுகளம் கணிக்க முடியாத ஆடுகளமாக இருந்து வருகிறது. இங்கு பந்து பேட்டிற்கு சரியாக வராது.

ஆடுகளம்

ஆடுகளம்

இதன் காரணமாக கடைசியாக இங்கு நடைபெற்ற 8 ஒருநாள் போட்டியில் 5 முறை பேட்டிங் செய்த அணிகள் ஆல் அவுட் ஆனது. கடந்த முறை இந்தியா, இங்கு வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்ட போது 104 ரன்களில் அந்த அணியை இந்திய வீரர்கள் சுருட்டினர். மேலும் பனிப்பொழிவும் அதிகம் இருக்கும் என்பதால், சேஸிங் செய்வதே சரியானதாக இருக்கும்.

டாஸ்

டாஸ்

ஆனால், ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இது பேட்டிங்கிற்கு நல்ல ஆடுகளமாக இருக்கும் என்று வேறு கூறினார். மேலும் ஹர்திக் பாண்டியா, உம்ரான் மாலிக் ஆகியோருக்கு ஓய்வு வழங்கியுள்ள ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தரை அணியில் சேர்த்திருக்கிறார்.

பெரிய ரிஸ்க்

பெரிய ரிஸ்க்

இலங்கை அணியும் 2 மாற்றங்களை செய்துள்ளது. தற்போது இந்திய அணியை பொறுத்தவரை வாசிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணி விளையாடுகிறது. வெறும் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் தான் அணியில் உள்ளனர். இதில் முதலில் பேட்டிங் செய்வதால், பனிப்பொழிவில் 3 சுழற்பந்துவீச்சாளர்கள் எப்படி பந்துவீசுவார்கள் என்று தெரியவில்லை.

இந்தியா பிளேயிங் லெவன்

இந்தியா பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, சுப்மான் கில், 3, விராட் கோலி, 4, கேஎல் ராகுல் 5 ஸ்ரேயாஸ் ஐயர், 6, சூர்யகுமார் யாதவ், 7, வாசிங்டன் சுந்தர், 8, அக்சர் பட்டேல், 9, குல்தீப் யாதவ், 10, முகமது ஷமி, 11, முகமது சிராஜ்

Story first published: Sunday, January 15, 2023, 13:39 [IST]
Other articles published on Jan 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+