Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. புறப்படுவதற்கு முன் கோயிலுக்கு சென்ற ரோகித்.. விநாயகரை குடும்பத்துடன் வழிபட்டார்.. செம பதிலடி

மும்பை : 2022 டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி, இன்று அதிகாலை மும்பையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது.

ஆஸ்திரேலியா செல்வதற்கு முன் இந்திய அணி வீரர்கள் கோட் சூட் போட்டு கொண்டு செம கெத்தாக புறப்பட்டு சென்றனர்.

நேராக பெர்த் நகரத்திற்கு செல்லும் இந்திய அணி, அங்கு ஒரு வாரம் பயிற்சியில் ஈடுபடுகிறது.

பயிற்சி ஆட்டங்கள்

பயிற்சி ஆட்டங்கள்

இந்த நிலையில், வரும் 10ஆம் தேதி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து 12ஆம் தேதி அதே அணியுடன் 2வது பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது. இதனைத் தொட்ர்ந்து 17ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடன், 19ஆம் தேதி நியூசிலாந்துடன் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

பெர்த் மைதானம்

பெர்த் மைதானம்

பெர்த் மைதானத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் என்பதால், வீரர்கள் அதனை பழகி கொள்ள ஏதுவாக 2 வாரத்திற்கு முன்பே இந்திய அணி புறப்பட்டு சென்றது. மேலும் ஆஸ்திரேலியாவில் அணியில் உள்ள 7 வீரர்கள் இதுவரை ஒரு முறை கூட விளையாடியது இல்லை. இந்த நிலையில், ரோகித் சர்மா செய்துள்ள காரியம் , ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ரோகித் வழிபாடு

ரோகித் வழிபாடு

டி20 உலககோப்பை தொடரில் செல்வதற்கு முன் கேப்டன் ரோகித் சர்மா குடும்பத்துடன் சென்று விநாயகரை வழிப்பட்டார். அப்போது உலககோப்பை வெல்வது குறித்து ரோகித் சர்மா நேர்த்தி கடன் செய்ததாகவும் தெரிகிறது. இது போன்ற பெரிய தொடரில் பங்கேற்பது முன் வீரர்கள், இது போன்று கோயிலுக்கு சென்று வழிப்படுவது வழக்கம் தான்.

பதிலடி

பதிலடி

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ், கடந்த வாரம் நவராத்திரியை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் கோயிலுக்கு சென்று வழிப்பாடு நடத்தினார். அப்போது ரசிகர்கள் சிலர், இந்திய வீரர்கள் இது போன்று செய்வதில்லை என்று விமர்சனம் செய்தனர். தற்போது அதற்கு பதிலடி தரும் விதமாக ரோகித் சர்மா, இதனை செய்துள்ளார்.

Story first published: Thursday, October 6, 2022, 21:32 [IST]
Other articles published on Oct 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+