லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றில், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 164 ரன்களுக்கு அவுட் ஆனார். லண்டன் ஓவல் மைதானத்திடல நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 327 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஃபுல் லெங்க்த் பந்துகளை வீசி ஸ்விங் செய்ய முயற்சித்தனர். ஆனால் , பந்து எதிர்பார்த்த அளவு ஸ்விங் ஆகவில்லை.

இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் தங்களுடைய யுத்தியை மாற்றி அமைத்தனர். பந்துகளை தொடர்ந்து ஷாட் பாலாக வீசி டிராவிஸ் ஹெட்க்கு நெருக்கடி கொடுத்தனர். அதுவரை நன்றாக விளையாடிய ஹெட், அதன் பிறகு தடுமாற தொடங்கிவிட்டார்.
முகமது சிராஜ், தொடர்ந்து ஹெட்டின் இடுப்புக்கு குறிவைத்து பந்துவீச, அவர் 164 ரன்கள் எடுத்த நிலையில், அவுட் ஆனார். அவருடைய இன்னிங்சில் 25 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். மறுபுறம் தொடர்ந்து பொறுமையாக விளையாடிய ஸ்மித், 229 பந்துகளில் சதம் அடித்தார்.

இதனையடுத்து, ஆல்ரவுண்டர் கேமிரான் கிரீன் களத்துக்கு வந்தார். அவருக்கு முகமது ஷமி விரித்த வலையில் சிக்கி, 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது 95.3வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் எடுத்துள்ளது.