Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

143 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. இந்தியா மோசமான சாதனை.. டக் அவுட்டில் பாக் சாதனை சமன்

கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணி பல திருப்பங்களையும் எதிர்பாராத டிவிஸ்ட்களையும் சந்தித்து இருக்கிறது. டாசை இழந்த இந்திய அணி முதலில் பந்து வீச நேரிட்டது.

ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் முகமது சிராஜ் அதிபயங்கரமாக பந்து வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்களில் சுருண்டது.

India created 2 most disappointed record in cricket history

இதனை அடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி மிகப்பெரிய இலக்கை எட்டி தென்னாபிரிக்காவை சுருட்டி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுவிடலாம் என நினைத்தது. இதற்கு தகுந்தார் போல் ரோகித் சர்மா 39 ரன்களும், கில் 36 ரன்களும் விராட் கோலி 46 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 153 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

அப்போது கே எல் ராகுல் எட்டு ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு இந்திய அணிக்கு யாரோ சூனியம் வைத்தது போல் வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். ஜடேஜா பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா என இதன் பிறகு வந்த அனைத்து வீரர்களுமே டக் அவுட் ஆகி வெளியேறினர். இதன் மூலம் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் இந்திய அணி கொத்தாக ஆறு விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனையை படைத்தது.

143 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆறு விக்கெட்டுகளை ஒரு அணி இழந்து இருப்பது இதுதான் முதல் முறை.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக டக் அவுட் ஆகி இந்திய அணி மற்றொரு சாதனையை படைத்திருக்கிறது. ஆனால் இதில் ஒரு மன ஆறுதலாக நமது பங்காளி பாகிஸ்தான் அணியும் இதே ஒரு சாதனையை 1980 ஆம் ஆண்டு படைத்திருந்திருக்கிறது.

பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து போன்ற அணிகள் ஏற்கனவே ஒரு இன்னிங்ஸில் ஆறு பேர் டக் அவுட்டாகி இருக்கிறார்கள். இதில் இந்தியா ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆறு பேர் டக்அவுட் ஆகி ஆட்டமிழந்தனர். அப்போதும் இந்தியா 152 ரன்கள் தான் எடுத்திருந்தது.

Story first published: Wednesday, January 3, 2024, 20:54 [IST]
Other articles published on Jan 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+