கண்டனத்துக்குள்ளான இந்திய அணிக்கு டெண்டுல்கர் ஆதரவு

சண்டிகர் வந்த டெண்டுல்கர் இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்திய அணி தன்னால் முடிந்த வரை சிறப்பாகவே ஆடியது. இருப்பினும் பவுன்சர்கள், ஷார்ட் பிட்ச் பந்துகளை திறமையாக கையாள எதிர்காலத்தில் போதிய பயிற்சிகளை எடுக்க வேண்டியது அவசியம்.
தங்களது பொறுப்புகளை வீரர்கள் உணர்வார்கள். வரும் போட்டிகளில் அதை உணர்ந்து சிறப்பாக விளையாடுவார்கள். நமது அணியினர் மீண்டும் உற்சாகத்துடன் வரும் போட்டிகளை சந்திக்க ரசிகர்களும் துணை நிற்க வேண்டும்.
சவால்கள்தான் ஒருவரை உறுதியான மனிதராக மாற்றுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது என்றார் டெண்டுல்கர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications