Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் முடிந்தது.. இனி இந்தியா விளையாடும் அடுத்த கிரிக்கெட் போட்டி எப்போது? கோலி, ரோகித் திரும்பும் தேதி

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசன் ரசிகர்களுக்கு கடந்து இரண்டு மாதம் விருந்து படைத்த நிலையில் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. 10 அணிகள் மோதிய இந்தத் தொடரில் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த சூழலில் அடுத்து கிரிக்கெட் போட்டி எப்போது என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் உள்ளது.

கிரிக்கெட் போட்டி தொடர்ந்து உலகம் முழுவதும் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டு இருக்கிறது. நாளை இந்த தொடரின் இரண்டாவது போட்டி மாலை ஐந்து மணிக்கு நடைபெறும். அது எல்லாம் வேண்டாம் இந்தியா எப்போது மோதுகிறது என்று கேட்டால் அதற்கும் விடை இருக்கின்றது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வரும் ஆறாம் தேதி சனிக்கிழமை நியூ சண்டிகாரில் பலப்பரிட்சை நடத்துகிறது. இந்தத் தொடரில் கில் தலைமையில் ராகுல், ஜெய்ஸ்வால், படிக்கல், ரிஷப் பந்த், சாய் சுதர்சன், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விளையாடுகின்றனர்.

இந்த தொடர் முடிவடைந்த பிறகு ஜூன் 13ஆம் தேதி சனிக்கிழமை ஆப்கானிஸ்தான், இந்தியா அணிகள் மோதும். மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், கில், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஆர்ஸ்தீப் சிங் உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் பங்கு பெறுகிறார்கள்.

இதனால் ஐபிஎல் தொடர் முடிவடைந்துவிட்டது என்று கவலையில் இருக்கும் ரசிகர்கள், இன்னும் சில நாட்களில் இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து மகிழலாம். இந்தத் தொடர் முடிவடைந்த அடுத்த ஒரு வாரத்தில் ஜூன் 26 ஆம் தேதி இந்தியா அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

அந்த தொடர் முடிவடைந்த உடன் மீண்டும் ஜூலை மாதம் 1ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அந்த தொடர் ஜூலை 19ஆம் தேதி முடிவடைய மீண்டும் ஜூலை 23ஆம் தேதி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும்.

Story first published: Monday, June 1, 2026, 14:46 [IST]
Other articles published on Jun 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+