Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

125 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கிய பிசிசிஐ.. வாங்கிய உடன் இந்திய வீரர்களின் நெகிழ்ச்சி செயல்

மும்பை : டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாயக்கான பரிசுத்தொகையை பிசிசிஐ வழங்கியது. 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றது.

இதனை அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதற்கு முன்பு மும்பை மரைன் டிரைவ் பகுதியில் திறந்தவெளி பேருந்தில் இந்திய வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

Indian Cricket Team rohit sharma victory parade


அப்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நின்று வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் இந்திய அணிக்கு ஒட்டுமொத்தமாக 125 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலை வழங்கும்போது விராட் கோலி மொத்தம் எனக்கே கொடுத்து விடுங்கள் என்பது போல் செய்கை செய்தார். இதனை பார்த்து ஜெய்ஷா சிரித்தார். பரிசுத்தொகையை வென்றவுடன் இந்திய வீரர்கள் மைதானத்தை சுற்றி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர் காலையிலிருந்து சுற்றித் திரிவதால் நேரமாகிவிட்டது என்றும் புறப்பட்டு விடலாம் என்றும் கூறினார்.

ஆனால் ரோகித் சர்மா இல்லை வேண்டாம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து விராட் கோலி, ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்தனர். அப்போது ரசிகர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விதமாக டென்னிஸ் பேட்டில் பந்துகளை அடித்து ரசிகர்களுக்கு வழங்கினர்.

இதனை அடுத்து வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி சென்றனர். அப்போது மீண்டும் ஒருமுறை விராட் கோலி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது அங்கு இருந்த ரசிகர்கள் செல்பி கேட்க சூரியகுமார் யாதவ் மட்டும் ரசிகர்களின் செல்போனை வாங்கி செல்பி எடுத்து கொண்டார். இன்று காலை டெல்லியில் வந்து இறங்கிய இந்திய வீரர்கள் தொடர்ந்து வரவேற்பு மழையில் நனைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பயிற்சியாளர் உட்பட இந்தியனில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்தப் பரிசுத் தொகை சுமார் ஐந்து முதல் ஆறு கோடி ரூபாய் பிரித்து வழங்கப்படலாம் என தெரிகிறது.

Story first published: Thursday, July 4, 2024, 23:29 [IST]
Other articles published on Jul 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+